பொறியாளர்கள் நியமனத்திற்கு டி.என்.பி.எஸ்.சி., நடத்திய ஒரு
தேர்வுக்கு, அதன் முடிவுகள் அடங்கிய பட்டியலை மூன்று
முறை வெளியிட்டு குளறுபடி நடந்துள்ளதாக தாக்கலான வழக்கில், அரசுத் தரப்பில்
விளக்கம் பெற்று
தெரிவிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஏற்கனவே வெளியான இரு பட்டியல்களில் இல்லாத 11 பேரின் பெயர்கள்,
மூன்றாவது பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் முறைகேடு நடந்துள்ளது.
ஜூலை 22, 25 மற்றும் 28 ல் நேர்காணல் நடக்கிறது. மூன்றாவது பட்டியல்
அடிப்படையில் நேர்காணல் நடத்த தடை விதிக்க வேண்டும். மூன்றாவது பட்டியலை
ரத்து செய்ய வேண்டும். என் பெயரை பட்டியலில் சேர்த்து, நியமனம் மேற்கொள்ள
உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். புதுக்கோட்டை இளங்கோவனும் இதுபோல
மனு செய்தார்.நீதிபதி கே.கே.சசிதரன், "டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் மற்றும்
தேர்வு கட்டுப்பாட்டாளரிடம் விளக்கம் பெற்று, ஜூலை 21 ல் தெரிவிக்க
வேண்டும்,” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...