காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் 2 நாள்களுக்கு நடைபெறுகிறது.
இதற்காக, பேரவை நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனை பேரவைத்
தலைவர் ப.தனபால் வெள்ளிக்கிழமை அறிவித்தார். அதன் விவரம்:வரும்
திங்கள்கிழமை காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதாக
இருந்தது. இது, ஆகஸ்ட் 5ஆம் தேதி பிற்பகலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினமும், ஆகஸ்ட் 6ஆம் தேதியும் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான
விவாதமும், அதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் பதிலுரையும் இடம்பெறும்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், ஜூலை 22 ஆம் தேதிக்கு மாற்றம்ம்ம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஜூலை 22 ஆம் தேதி நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறும் என்று திருத்தியமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பேரவை நடவடிக்கைகள் இல்லை.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...