பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு நாளை
(சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்குனர்
கு.தேவராஜன் தெரிவித்தார். நாளை முடிவு தெரியும் கடந்த மார்ச் மாதம் தேர்வு
எழுதி தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் எழுதி உடனே கல்லூரியில் சேர்வதற்கு
வசதியாக அரசு பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி இந்த
வருடம் பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு
கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது.
சிறப்பு துணைத் தேர்வு
எழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) மதிப்பெண்
சான்றிதழ்களை நாளை (சனிக்கிழமை) முற்பகல் 11 மணி முதல் அவர்கள் தேர்வு
எழுதிய தேர்வு மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.தேர்வு
முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப் படமாட்டாது. புதிய நடைமுறைகளினால், கடந்த
ஆண்டை விட 20 நாட்கள் முன்னதாகவே இந்தஆண்டு தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண்
சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுகிறது.விடைத்தாள் நகல் பெற விடைத்தாளின்
நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 14–ந்தேதி முதல் 16–ந்தேதி வரை
நேரில் சென்று உரிய கட்டணத்துடன் ஆன்–லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50–ஐ
பணமாகச் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விடைத்தாள் நகல் பெற கட்டண விவரம்
வருமாறு:–பகுதி – 1 மொழி – ரூ.550, பகுதி – 2 மொழி (ஆங்கிலம்) – ரூ.550
ஏனையப் பாடங்கள் – ரூ.275–(ஒவ்வொன்றிற்கும்) மறுகூட்டல் கட்டணம் வருமாறு:–
பகுதி – 1 மொழி, பகுதி –2 மொழி (ஆங்கிலம்)– ரூ. 305–மற்றும் உயிரியல்
(ஒவ்வொன்றிற்கும்) ஏனையப்பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) ரூ.205
விண்ணப்பித்தபின் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள
விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுத் துறையால் பின்னர்
அறிவிக்கப்படும்தேதியில் விடைத்தாள்களின் நகல்களை இணையதளத்தில் பதிவிறக்கம்
செய்துகொள்ள முடியும்.மறுகூட்டல் முடிவுகள் பற்றி அறிய இயலும். இந்த தகவலை
அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...