தேனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 29 ஆண்டுகளுக்கு பிறகு, 49 வயதானவருக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்துள்ளது.
தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்தவர் கேரளபுத்திரன், 49. எட்டாம் வகுப்பு
முடித்த இவர், தனது கல்வி தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1985
ம் ஆண்டு மே 25 ல் பதிவு செய்தார். அதன்பிறகு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை,
தவறாமல் தனது பதிவை தற்போது வரை புதுப்பித்து வந்தார். 29 ஆண்டுகளுக்கு
பிறகு, தற்போது போடி சி.பி.ஏ., கல்லூரியில் அலுவலக உதவியாளர்
பணியிடத்திற்கு நேர்முக தேர்விற்கு வருமாறு, கேரளபுத்திரனுக்கு தேனி வேலை
வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.நேற்று நடந்த
நேர்முகத் தேர்வில் பங்கேற்று,
வேலை கிடைக்குமா என்ற நிலையில் காத்திருந்த அவர் கூறியதாவது:
தற்போது எனக்கு 49 வயதாகிறது. இப்போது வேலை கிடைத்தால், அரசு விதிப்படி 58
வயது வரை, அதாவது 9 ஆண்டுகள் வேலை பார்க்க முடியும். இந்த 9 ஆண்டுகளாவது
நான் நிம்மதியாக வாழ்வேன். மிகவும் வறுமையில் தவிக்கும் நான், என் குடும்ப
நிலை குறித்து தமிழக அரசுக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி வந்தேன். இதன்
பலனாக தற்போது இந்த வேலைக்கு அழைப்பு வந்துள்ளது. வேலை கிடைக்குமா என்பது
தெரியவில்லை, என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...