Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தரம் உயர்த்தப்படும் 200 பள்ளிகள்காலியிடம் நிரப்ப மீண்டும் 'கவுன்சிலிங்' சட்டசபையை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்?

           சிவகங்கை :தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் அரசு உயர், மேல்நிலைப்பள்ளி காலியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சிலிங் அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகுமா என, ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழகத்தில் 32 மாவட்டத்திலும் தரம் உயர்வுக்கு தகுதியான அரசு பள்ளிகள் குறித்த பட்டியலை சேகரித்த கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது. 

          உயர், மேல்நிலை கல்வியை பொறுத்தவரை இரு பிரிவிலும் தலா 100 பள்ளிகள் என, தரம் உயர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு இன்று (ஜூலை17) சட்டசபை கல்வித்துறை குறித்த மானியக் கோரிக்கையின்போது வெளியாகலாம் என, எதிர்பார்ப்பதாக கல்வித்துறை யினர், ஆசிரியர் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர். இதன்படி, உயர்,மேல்நிலை கல்வியில் 200 பள்ளிகளை தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டால், உயர் நிலை வகுப்பில் 500 புதிய இடங்களும், மேல்நிலையில் 900 காலி பணியிடமும் உருவாகும். இவ்விடங்களை நிரப்ப மீண்டும் கவுன்சிலிங் நடத்தினால் உள், வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரிய பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என, ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

           ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், " ஏற்கனவே முடிந்த மாறுதல் கவுன்சிலிங்கில் சாதகமான சில இடங்களை மறைத்து, சிபாரிசுகளுக்கு மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. சட்ட சபை கல்வித்துறை மானியக் கோரிக்கையில் தரம் உயர்த்தி அறிவிக்கப்படும் பள்ளிகளுக்குமான காலியிடங்களை நிரப்ப மீண்டும் கவுன்சிலிங் நடத்தினால் அரசியல், பணம் பலமற்று, ஒரே பள்ளியில் பத்தாண்டுக்கு மேல் பணிபுரியும் வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்,” என்றார்.




1 Comments:

  1. மூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.


    மாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு கை தட்டினால் ஓசை வராது, நாம் அனைவரும் ஒன்றினைந்தால் கன்டிப்பாக மாற்ற முடியும். ஒரு நிமிடம் தாமதித்தாலும் நமது எதிர்காலம் இருன்டுவிடும். காலம் பொன் போன்றது. தாமதிக்காதீர் நண்பர்களே.

    இந்த ஜிஒ வில் அக்காடமிக் மதிப்பெண்ணுக்கு வெயிட்டேஜ் கொடுப்பது மிகவும் முரன்பாடாக உள்ளது. ஏனென்றால் இவை அனைத்தும் டிஇடி தேர்வு எழுத தேவையான அடிப்படை தகுதிகள். எனவே இந்த ஜிஒ வும் ரத்து செய்யயப்படவேண்டிடும்.

    சிந்தியுங்கள் செயல்படுங்கள் நண்பர்களே. போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நேரமிது. ஜிஒ வை மாற்ற வேண்டியது மூத்த ஆசிரியர்களுக்கு கட்டாயமாகிறது.

    9003540800
    9442799974

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive