திருக்குறளுக்கு இசையமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. விரைவில் 1 லட்சம்
குறுந்தகடுகள் இலவசமாக வெளியிடப்படும் என்றார் இசையமைப்பாளர் பரத்வாஜ்.தென்காசி
திருவள்ளுவர் கழகம் மற்றும் மூத்த குடிமக்கள் மன்றம் சார்பில்
இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
திருக்குறளின் 1330 குறள்களுக்கும் இசையமைத்து குறுந்தகடாக வெளியிட உள்ள அவரின் அரிய சேவையைப் பாராட்டி இந்ப் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மூத்த குடிமக்கள் மன்றத் தலைவர் துரை.தம்புராஜ் தலைமை வகித்தார். செயலர் ஆ.சிவராமகிருஷ்ணன் விளக்கவுரையாற்றினார்.
இதில், இசையமைப்பாளர் பரத்வாஜ் பேசியதாவது:
திருக்குறளை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் என்னுடைய நோக்கம். அதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து பெருமுயற்சியுடன் திருக்குறளுக்கு இசையமைத்து, இப்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு லட்சம் சி.டி.க்கள் தயாரித்து அதனை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்து வருகிறேன். அவற்றை இலவசமாக வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன் என்றார் அவர்.
சீதாராமன், புலவர் செல்வராஜ், பேராசிரியர் ராமச்சந்திரன்,கணபதிசுப்பிரமணியன், ராஜாமுகம்மது ஆகியோர் பேசினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...