"மாநில அரசின், 28 துறைகளில், 1.90 லட்சம் பதவிகள் காலியாக
உள்ளன. ஆனால், இதில்,அவசியமான பதவிகள் மட்டுமே நிரப்பப்படும்,” என,
முதல்வர் சித்தராமய்யா, மேலவையில்தெரிவித்தார்.
மேலவையில் கேள்வி நேரத்தில், ம.ஜ.த., - எம்.எல்.சி.,இ.கிருஷ்ணப்பா கேள்விக்குபதிலளித்து, முதல்வர் சித்தராமய்யா கூறியதாவது:
கல்வி, சுகாதார, போலீஸ் துறைகளில், காலியாக உள்ள பதவிகளை நிரப்பும்படி
உத்தவிடப்பட்டுள்ளது. 16,600 ஆசிரியர்கள் நியமனத்துக்கும், 9,000 போலீஸ்
பதவிகள் நியமனத்துக்கும் உத்தரவு வெளியிடப்படுகிறது. முந்தைய அரசுகள்,
காலாகாலத்தில், காலியான இடங்களை நிரப்பாததால், இந்தளவிலான இடங்கள்,
காலியாகவே உள்ளன. எதிர்வரும் நாட்களில், அவசியமான பதவிகள் நிரப்பப்படும்.
விவசாய துறை, மாற்றி அமைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், 7,000 பதவிகள்
ரத்தாகின. மாநில அரசின், 28 துறைகளில், 1.90 லட்சம் பதவிகள் காலியாக உள்ளன.
பெரும்பாலான துறைகளில், தேவையில்லாத பதவிகள் இருப்பது, அரசின் கவனத்துக்கு
வந்துள்ளது. அவசியமான இடங்களை மட்டும் நிரப்ப, அரசு முன்வந்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...