இந்தியாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களில் முக்கால் பங்கினர் போலியான சான்றிதழ்களை அளித்து பணிபுரிந்து வருகின்றனர் என்ற
செய்தி அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மற்றும்
மாநில அரசுகளில் பணிபுரியும் இதுபோன்ற கருப்பு ஆடுகள்தான் உண்மையான
திறமையாளர்களையும் பின்னுக்குத் தள்ளி உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.
அதன்படி மத்திய அரசில் செயல்படும் பல்வேறு துறைகளில் கிட்டதட்ட 1,800
பேருக்கும் மேலாக போலியான சான்றிதழ்கள் அளித்து பணிபுரிந்து வருவது
கண்டறியப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு பணி:
பதவியேற்றுள்ள புதிய அரசானது, மத்திய அரசாங்க ஊழியர்களின் சான்றிதழ்களை
சரிபார்க்கும் பரிசோதனையினை நடத்தியது. அதன்மூலமாகதான் இப்போலியான
ஊழியர்களைப் பற்றிய விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2010இல் அதிகம்:
இப்போலியான சான்றிதழ் ஊழியர்கள் 2010 ஆம் ஆண்டு முதல்தான் அதிகமாக உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
சாதிச் சான்றும் போலி:
போலியான சான்றிதழ்களை அளி்த்து பணியி்ல் சேர்ந்துள்ளவர்களில்
பெரும்பாலானோர் கல்வி சான்றிதழ்கள் மட்டுமல்லாது ஜாதிச்சான்றிதழ்களையும்
போலியாக தயாரித்து பணியில் சேர்ந்துள்ளனர்.
ஒழுங்கு நடவடிக்கைகள்:
இதன்படி போலி சான்று அளித்த ஆயிரத்து 832 பேர்களில் 276 பேர் இடை நீக்கம்
மற்றும் பணி நீக்கத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 35 பேர் மீது
ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துளார்.
பீகார் ஆசிரியர்கள்:
பீகார் மாநிலத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான
கால கட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 43 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில்
சேர்ந்துள்ளனர்.
கண்ணைக் கட்டுதே:
இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் போலியான கல்வித்தகுதி சான்றிதழ்களை
அளித்து பணியி்ல் சேர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு
சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்
சுமார் 12 ஆயிரம் பேர் போலியானவர்கள் என கண்டறியப்பட்டது.
சிஷாக் நியாஜனிலும் குழப்படி:
மேலும் 2008 ஆம் ஆண்டு சி்ஷாக் நியோஜன் திட்டத்தின் கீழ் பீகார்
மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் சுமார் 40 ஆயிரம் பேர் போலி சான்றிதழ்
அளி்த்து கல்வி பணியி்ல் சேர்ந்துள்ளனர்.
பணிநீக்க உத்தரவு:
இவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் போலியான கல்வி சான்றிதழ் மற்றும் குறைவான
மதிப்பெண் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...