நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் வருகிற 10–ந்
தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் நெல்லை மற்றும்
பாளையங்கோட்டை தாலுகாக்களில் உள்ள மாநில அரசு நிறுவனங்களுக்கும், பள்ளி,
கல்லூரிகளில் நடைபெற்று வரும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத
வகையில் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. உள்ளூர் விடுமுறை நாளன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் முக்கிய தேர்வுகள் நடைபெறும். மாவட்ட கருவூலம், அனைத்து சார்நிலைக் கருவூலங்களுக்கும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் தொடர்பான அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 13.9.2014 வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்
தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நெல்லையப்பரின் அருள் கிடைக்கட்டும். அ.ந.கரூர்.
ReplyDeleteஆண்டவனின் அருளாசி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்
ReplyDelete