Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

107 பேர் மருத்துவ படிப்புக்கு சென்றுவிட்டனர்:

           அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது 107 பேர் மருத்துவ படிப்புக்கு சென்றுவிட்டனர்:

          அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது. நேற்று கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்பட்ட 271 பேரில் 107 பேர் வரவில்லை. அவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பை தேர்ந்து எடுத்துள்ளனர்.என்ஜினீயரிங் சேரஇடங்கள் விவரம் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகள் 16 உள்ளன. 10 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளும், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் இருக்கின்றன. 501 சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளும், 2 மத்திய அரசின் என்ஜினீயரிங் கல்லூரிகளும், புதிதாக இந்த வருடம் வந்த 2 சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளும் சேர்த்து மொத்தம் 534 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1 லட்சத்து 81 ஆயிரத்து 941 இடங்கள் இருக்கின்றன.
 
          நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 28 ஆயிரத்து 712 இடங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 653 இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுக்கு வந்துள்ளன. இந்த 2 லட்சத்து 10 ஆயிரத்து 653 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஆகியவை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. பொது கலந்தாய்வு கடந்த 27-ந் தேதி நடத்தப்படுவதாக இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது. பொது கலந்தாய்வு தொடங்கியதுதள்ளிவைக்கப்பட்ட கலந்தாய்வு 7-ந் தேதி தொடங்குகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று பொது கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. முதல் நாள் என்பதால் நன்றாக படிக்கக்கூடிய மாணவ-மாணவிகள், குறிப்பாக 200-க்கு 200 கட்-ஆப் மார்க் எடுத்தவர்கள்தான் முதலில் அழைக்கப்பட்டனர். 
 
             மொத்தத்தில் 200-க்கு 200 கட்-ஆப் எடுத்தவர்கள் 271 பேர். மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பெற்றோர்களுடன் கலந்தாய்வுக்கு வந்திருந்தனர். முதல் 4 ரேங்க் வரை எடுத்த மாணவ-மாணவிகள் வரவில்லை. எனவே 5-வது ரேங்க் எடுத்த மாணவி ஹரிதா முதல் மாணவியாக அழைக்கப்பட்டார். அவர் உள்பட முதல் 10 ரேங்க் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் தேர்ந்து எடுத்த கல்லூரிகளில் படிப்பதற்கான உத்தரவுகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வழங்கி கலந்தாய்வை தொடங்கிவைத்து மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஹேமந்த் குமார் சின்கா, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார்ஜெயந்த், உயர் கல்வித்துறை இணை செயலாளர் ஜெ.உமாமகேஸ்வரி, மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், பேராசிரியர் நாகராஜன், ராமலிங்கம், ராஜேந்திரபூபதி மற்றும் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 
               107 பேர் மருத்துவ படிப்பில்சேர்ந்தனர்நேற்று முதல் நாள் கலந்தாய்வு என்பதால் 2 ஆயிரத்து 350 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டனர். ஆனால் 200-க்கு 200 கட்-ஆப் முதலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் 271 பேர். அவர்களில் நேற்று 107 பேர் வரவில்லை. இவர்கள் அனைவரும் மருத்துவ படிப்பை தேர்ந்து எடுத்துள்ளனர். அவர்கள் மருத்துவ கலந்தாய்வுக்கும், என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கும் விண்ணப்பித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) 4 ஆயிரம் பேரும், நாளை முதல் 4 ஆயிரத்து 500 பேரும், 10-ந் தேதி முதல் 5 ஆயிரம் பேரும் அழைக்கப்படுவார்கள். அதன் பிறகும் கலந்தாய்வுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே அழைக்கப்படுகிறார்கள்.வந்திருந்தவர்களில் முதல் 10 ரேங்க் எடுத்தவர்கள் பெயர்கள் விவரம் வருமாறு:-முதல் 10 இடம் பெற்றவர்கள்1. ஹரிதா, பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்.2. பிரபு, பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, திருப்பூரைச் சேர்ந்தவர்.3. ரவிசங்கர், பி.இ. எலக்ட்ரானிக் கம்யூனிகேசன், பி.எஸ்.ஜி. என்ஜினீயரிங் கல்லூரி, கோவையைச் சேர்ந்தவர்.4. விஷ்ணுப்பிரியா, பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, ஈரோட்டைச் சேர்ந்தவர். 5. ராமு, பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, வேலூரைச் சேர்ந்தவர். 6. சூர்யா மல்லிகாராஜ், பி.இ. மெக்கானிக்கல், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, பெருந்துறையில் வசித்து வருபவர். 7. பிரதிக்ஷா, பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்.8. ராகுல் பாலாஜி, பி.இ. எலக்ட்ரானிக் கம்யூனிகேசன், கோவை பி.எஸ்.ஜி .என்ஜினீயரிங் கல்லூரி, கோவையில் வசித்து வருபவர். 9. தர்ஷினி மீனா, பி.இ. எலக்ட்ரானிக் கம்யூனிகேசன், கோவை பி.எஸ்.ஜி. என்ஜினீயரிங் கல்லூரி, கோவையைச் சேர்ந்தவர்.10. யோகராஜ், பி.இ. மெக்கானிக்கல், பி.எஸ்.ஜி. என்ஜினீயரிங் கல்லூரி, குமாரப்பாளையத்தில் வசித்து வருபவர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive