தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேற்று குரூப்-1 தேர்வை நடத்தியது. 50 சதவீதம்
பேர் தேர்வு எழுத வரவில்லை.79 பணியிடங்கள்தமிழ்நாட்டில்
காலியாக இருக்கும் உயர் பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
குரூப்-1 தேர்வை நடத்தி ஆட்களை தேர்வு செய்கிறது. இந்த தேர்வு முதல் நிலை
தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று 3 கட்டங்களாக
நடத்தப்படுகிறது.
3 துணை கலெக்டர் பணியிடங்கள், 33 துணை போலீஸ்
சூப்பிரண்டு பணியிடங்கள், 33 வணிகவரித்துறை உதவி ஆணையர் பணியிடங்கள், 10
ஊரக மேம்பாட்டு துறை உதவி இயக்குனர் பணியிடங்கள் என மொத்தம் 79 பணியிடங்களை
தமிழ்நாட்டில் நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த
வருடம் டிசம்பர் மாதம் 29-ந்தேதி முதல் விண்ணப்பங்களை பெற்றது.
ஜனவரி
மாதம் 28-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து
170 பேர் விண்ணப்பித்தனர்.முதல்நிலை தேர்வு நேற்று முதல் நிலை தேர்வு,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 32 மாவட்டங்களிலும் மொத்தம் 570 மையங்களில்
நடைபெற்றது.
சென்னையில்
அரசு காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, வேப்பேரி செயிண்ட் பால்ஸ்
மேல்நிலைப்பள்ளி உள்பட 108 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 18 ஆயிரம் பேர்
எழுதினார்கள். சென்னையில் சில தேர்வு மையங்களை தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன், தேர்வு
கட்டுப்பாட்டு அதிகார வெ.ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர். தேர்வு மையங்களில்
570 பேர் கண்காணிப்பாளராக செயல்பட்டனர். நேற்று எழுதிய முதல்நிலை
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
அதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.
மெயின்தேர்வில் எடுத்த மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வில் எடுக்கும்
மதிப்பெண்களை கொண்டு வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு
முழுவதும் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் 1 லட்சத்து 40 ஆயிரத்து 170
பேர். இவர்களில் 50 சதவீதம் பேர் தேர்வு எழுதவரவில்லை. தேர்வு
எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் பி.இ., எம்.இ. படித்தவர்கள்தான். எளிதாக
இருந்ததாக கருத்து தேர்வு
முடிந்து வெளியே வந்த சென்னை தியாகராயநகரைச்சேர்ந்த மணி கூறுகையில் நான்
பி.இ. படித்துள்ளேன். சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத ஒரு பயிற்சி
மையத்திற்கு சென்றுவருகிறேன். குரூப்-1 தேர்வுக்கும் பயிற்சி
எடுத்துள்ளேன். குரூப்-1 தேர்வை 2-வது முறையாக எழுதி உள்ளேன். இந்த முறை
எளிதாக இருந்தது. எப்படியும் தேர்ச்சி பெற்று குரூப்-1 அதிகாரியாவேன்
என்றார்.மணலியைச்சேர்ந்த ரேஷ்மி என்ற பட்டதாரி கூறுகையில் நான்
பி.எஸ்சி. வேதியியல் படித்துள்ளேன். நான் முதல் முறை குரூப்-1 தேர்வு எழுதி
உள்ளேன் பயிற்சி மையத்திற்கு செல்லவில்லை. நானும் என்னுடைய தோழிகள் 2 பேர்
சேர்ந்து குரூப்பாக படித்தோம். அதனால் தேர்வு எனக்கு எளிதாக இருந்தது
என்றார்.10 நாளில் விடை வெளியீடுதேர்வு முடிந்த பின்னர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா
கூறுகையில் குரூப்-1 தேர்வில் 45 முதல் 50 சதவீதம் வரை மாணவர்கள் வரவில்லை.
இந்த தேர்வுக்கான வினா- விடை( கீ- ஆன்சர் ) 10 நாட்களில் இணையதளத்தில்
வெளியிடப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...