ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்க மறுத்த பாடத்தை, திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி நிர்வாகம் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கலைகல்லூரியில், பி.எஸ்.சி., விலங்கியல் தொழிற்கல்வி பாடப்பிரிவில், ஆண்டிற்குமாணவிகள் படிக்கின்றனர் 32 .
இந்த பாடம்படித்த 100 பேர், ஆசிரியர் தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற்றனர். ஆனால், அவர்களுக்கு பி.எஸ்.சி., விலங்கியல்
தொழிற்கல்வி, பி.எஸ்.சி.,
விலங்கியலுக்கு சமமானது என்பதற்கான அரசாணைஇல்லை
என்று கூறி, ஆசிரியர் பணி
தர டி.ஆர்.பி.,
மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் கலெக்டர்வெங்கடாசலத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து,
பாடப்பிரிவை மாற்றியமைக்க எம்.வி.எம்.,
அரசு கல்லூரி நிர்வாகம் முடிவு
செய்துள்ளது.
கல்லூரி
முதல்வர் பத்மலதா கூறியதாவது: எங்கள்
கல்லூரியில் பல ஆண்டுகளாக பி.எஸ்.சி., விலங்கியல்
தொழிற்கல்வி பாடம் இருந்து வருகிறது.
தற்போது, டி.ஆர்.பி.,
ஏற்க மறுத்துள்ளதால், அதனை பி.எஸ்.சி.,விலங்கியல் பாடமாக
மாற்றியமைக்க கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை
மூலம் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், ஏற்கனவே படித்தவர்கள்
பாதிக்காத வகையில், பி.எஸ்.சி.,விலங்கியல் தொழிற்கல்வி, பி.எஸ்.சி.,விலங்கியலுக்கு சமமானது என்பதற்கான அரசாணை
வெளியிடவும் தமிழக அரசுக்கு கடிதம்
எழுதியுள்ளோம், என்றார். விலங்கியல் தொழிற்கல்வி துறைத்தலைவர் பவானி உடனிருந்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...