ஆன்லைனில் புதிய
கட் ஆப் மதிப்பெண் உயர் நீதிமன்ற உத்தரவால் அதிரடி மாற்றம் உயர் நீதிமன்ற உத்தரவால்,
ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது. மத்திய அரசின் இலவச கட்டாயக்
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8- வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு
தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும்.
தமிழகத்தில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை தமிழகம் முழுவதும் 5.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மார்க்) ஆகும். அதன்படி, தகுதித்தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் எடுத்து 27 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சிபெற்றனர். வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் சுமார் 24 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவுசெய்திருந்தது.தகுதித்தேர்வு மதிப்பெண், பிளஸ்2 மதிப்பெண், பட்டப்படிப்பு மதிப்பெண், பி.எட்.மதிப்பெண் (இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தகுதித்தேர்வு,பிளஸ்-2, ஆசிரியர் பட்டயப்படிப்பு மதிப்பெண்)அடிப்படையில் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கப்பட்டது.அதுமட்டுமின்றி ஒவ்வொரு தேர்விலும் குறிப்பிட்ட மதிப்பெண்சதவீதம் முதல் குறிப்பிட்ட சதவீதம் வரை குறிப்பிட்ட மார்க்நிர்ணயிக்கப்பட்டு அதன்படி கட் ஆப் மதிப்பெண் தயாரிக்க முடிவுசெய்யப்பட்டு அதன்அடிப்படையிலேயே 27 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தி முடிக்கப்பட்டது.
மதிப்பெண் சலுகை இதற்கிடையே, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு
குறைந்தபட்ச மதிப்பெண் தேர்ச்சி 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக (150-க்கு 82 மார்க்)
குறைத்து கடந்த பிப்ரவரி 6-ம்தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது. 5 சதவீத மதிப்பெண் சலுகையால்
கூடுதலாக 46 ஆயிரம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே, கூடுதலாக தேர்ச்சி
பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 21 ஆயிரம் பேருக்கு கடந்த 2மாதங்களுக்கு முன்பு வெயிட்டேஜ்
மதிப்பெண் முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான
(சுமார் 25 ஆயிரம் பேர்) சான்றிதழ் சரிபார்ப்பு மே 6முதல் 12-ம்தேதி வரை நடத்தப்படும்
என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.புதிய கட் ஆப் மார்க் இந்நிலையில்,
தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில்
அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண்,பி.எட்.
மதிப்பெண்,தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட
சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு,
தேர்வர்கள் பெற்ற மதிப் பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு மாற்றிக்கொள்ளும் வகையில்
தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு
முடித்த ஏறத்தாழ 48 ஆயிரம் பேர் உள்பட 73 ஆயிரம் பேருக்கும் புதிய கட் ஆப் மதிப்பெண்
வரும். உதாரணத்துக்கு பழைய முறையில், தகுதித்தேர்வில் 90 சதவீதம் முதல் 99 சதவீதம்
வரை மதிப்பெண் பெற்றாலும் அனைவருக்கும் 60 மார்க் வழங்கப்படும். ஆனால்,நீதிமன்ற உத்தரவின்படி
95 சதவீத மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க் பெறுவார் என்பது
குறிப்பிடத்தக்கது. மதிப்பெண்ணுக்கு ஏற்ப கட் ஆப் இதே முறைதான் பிளஸ் 2, பட்டப்படிப்பு,
பி.எட்.இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் அனைத்து கணக்கீட்டுக்கும் பொருந்தும்
எனவே,
அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணுக்கு தக்கவாறு கூடுதல் மதிப்பெண்
பெறுவார்கள்.உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு
முடித்தவர்களுக்கு புதிதாகசரிபார்ப்பு நடத்தப்படுமா,ஆசிரியர் நியமனம் தாமதம் ஆகுமா
என்று கேட்டதற்கு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:ஏற்கெனவே சான்றிதழ்
சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்க ளின் மதிப்பெண் விவரம் எங்களிடம் உள்ளது. கணினி மூலம்
அவர்கள் அனைவருக்கும், புதிய முறையில் மதிப்பெண் கணக்கிட்டுவிடலாம். இதற்கு எவ்வித
காலதாமதமும் ஆகாது. அவர்களின் புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில்
வெளியிடப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
segrama new cutoff list vidunga sir.we are waiting sir
ReplyDeleteSENIORITY PAAKKATHA TRB VIRAIVIL ????????????????????????????????
ReplyDeleteThanks tn govt and trb
ReplyDeleteVery very thanks to tn govt and TRB & padasalai
ReplyDeletefnds my new weightage 70.1 in paper-1 wil i get job?
ReplyDeleteNanbargaley intha murai mutrilum unmaianathuthana????????????????????????
ReplyDeletePass aana anaivarukkum velai kodungal inimeal pass aagum nanbargalukkum velai kodukkum arasangam endru varugiradho andru than dted,bed paditha anaivarukkum freedom intha velaikku kaathu kondirukkum illai illai eangikondirukkum aasiriyargallukku enna solla pogiradhu intha ulagam
This comment has been removed by a blog administrator.
ReplyDeletePaper 2( history) mbc, male my new weigt 58.06 . Job kudaikuma frnds pls tel me ....???
ReplyDelete