Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்-TNPTF


       நடுநிலைப்பள்ளிகளில் தேவைப்பட்டியலில் உள்ள பட்டதாரி காலிப்பணியிடங்களை பதவி உயர்வு பட்டியலில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகிற திங்கள்கிழமை மாவட்ட அளவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்க உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.

           தஞ்சாவூரில் கடந்த 3 வருடங்களாக கூடுதலாக பட்டதாரி ஆசிரியர் தேவைப்படும் நடுநிலைப்பள்ளிகளில் Need post create செய்யவில்லை.இதனால் பதவி உயர்வில் உள்ள இ.நி.ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.தற்பொழுது 97 பட்டதாரி பணியிடங்களை (need post) மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் இயக்குனரிடம் கோரியுள்ளது.அந்த பணியிடங்கள் நேரடி நியமனத்தின் மூலமாக நிரப்ப உள்ளனர் (need post fill only new appointment )3 ஆண்டுகளாக need post பெறாதது மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரின் தவறு,3 ஆண்டுகளாக need post கோரியும் வழங்காதது அரசின் தவறு,அப்படியிருக்க எந்த வகையில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படலாம்..?

need post-ஐ புதிய நியமனத்தில் தான் நிரப்ப வேண்டும் என்று அரசின் கொள்கை முடிவில் இல்லை.

எனவே குறைந்தது need post-ல் உள்ள 50% காலிப்பணியிடங்களை பதவி உயர்வில் உள்ள இ.நி.ஆசிரியர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு மூலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வரும் திங்கள் கிழமை(23.06.14)மாபெரும் உண்ணாவிரதம் TNPTF-ஆல் தஞ்சாவூரில் நடக்கவுள்ளது .

இந்த பாதிப்பு பரவலாக பல மாவட்டங்களில் உள்ளது.எனவே இந்த கோரிக்கையை கூடிய விரைவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பிடம் எடுத்துக் கூறி மாநில அளவில் போராட்டம் நடத்த வலியுறுத்த உள்ளதாகவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் உயர்திரு .குருசாமி அவர்கள் நம்மிடம் தெரிவித்தார்.

Thanks To,
Devarajan (Teachers Friend Devarajan)




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive