Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC GROUP 4 இளநிலை உதவியாளர் 1,500 பேர் பணி நியமனத்திற்கு காத்திருப்பு

         டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) தேர்வில், பள்ளி கல்வித் துறைக்கு, பணி ஒதுக்கீடு பெற்ற, 1,500 இளநிலை உதவியாளர்கள், இதுவரை பணி நியமனம் செய்யப்படவில்லை.

          கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 25ல், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு, போட்டித் தேர்வு நடந்தது. இதில், இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு பெற்றவர்களில், 1,500 பேர், பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், பள்ளி கல்வித் துறையிடம் ஒப்படைத்து பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு வேலை கிடைத்தும், பணியில் சேர முடியாத நிலையில், 1,500 பேரும் தவித்து வருகின்றனர்.

              இதுகுறித்து, கல்வித் துறை பணியாளர்கள் கூறியதாவது: பணி நியமன பணியை மேற்கொள்ள வேண்டிய இணை இயக்குனர் கருப்பசாமி, பல்வேறு பணிகளில், 'பிசி'யாக உள்ளார். இதனால், பணி நியமன வேலை இழுத்துக் கொண்டே செல்கிறது. பல பிரிவுகளில், பணியாளர் இல்லை. மாநில அளவில், கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளிலும், இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. தேர்வு பெற்றவர்களை உடனே பணி நியமனம் செய்திருந்தால், அலுவலகங்களில் வேலையும் நடந்திருக்கும்; அவர்களும், நான்கு மாதங்களாக, சம்பளம் பெற்றிருப்பர். தற்போது, எதற்குமே வழியில்லாமல் காத்திருக்கின்றனர். கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெற்ற அனைத்து இளநிலை உதவியாளர்களையும், உடனே பணி நியமனம் செய்ய, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.




6 Comments:

  1. TET-TRB--ல தான் வேலை போடாம, எங்க வாழ்க்கையில விளையாடுறீங்க, இதலயாவது வேலை கிடைக்கும்னு பாத்தா, இதிலும் ஏமாற்றம்!!!!!!!!! ஏமாற்றம்!!!!!!!!!!..... கல்வித் துறையே உனக்கே இது நியாயமா?????

    ReplyDelete
  2. Kovinda kovinda

    ReplyDelete
  3. School edn thavira mantra dept choose pannavangalukku order vandhulladha?

    ReplyDelete
  4. Feb19 la join panna 504 junior assistantku innum salary varala

    ReplyDelete
  5. இந்தியாவில் சாதனை அரசை வழி நடத்தும், நம் அம்மாவின் பொற்கால ஆட்சியிலே அம்மாவின் நற்ப்பெயர்க்கு களங்கம் விளைவிக்கும் துறையாக இருக்கும் ஒரே ஒரு வீணா போன துறை ..தமிழக கல்வித்துறை இந்த துறையை 1500 குடும்பங்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.. அம்மா எங்கள் அம்மா இத்துறையை வன்மையாக கண்டியுங்கள்... நன்றி வணக்கம்.

    ReplyDelete
  6. Eppo joining order kidaikkum.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive