Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC Department Exam Gazette Correction

         டி.என்.பி.எஸ்.சி. நடத்திய துறை தேர்வில் பாஸ் ஆனவர்களை பெயில் என்று கெசட்டில் வெளியிட்டது. மீண்டும் பாஸ் என்று திருத்தம் செய்து சரியாக கெசட்டை வெளியிட்டுள்ளது.

        டி.என்.பி.எஸ்.சி. நடத்திய துறை சார்ந்த தேர்வில், பாஸ் ஆனவர்கள், பெயில் என்று கெசட்டில் வெளியிடப்பட்டது. 
 
              இது தொடர்பாக நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியால் உடனடி நடவடிக்கையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் எடுத்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துறைத் தேர்வுகளில் ஒன்றான லோக்கல் பண்ட் ஆடிட்டிங் டிபார்மெண்ட் தேர்வை கடந்த டிசம்பரில் நடத்தியது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை 5,000க் கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் எழுதினர்.

              இதற்கான ரிசல்ட் கடந்த மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தேர்ச்சி பெற்றதாக, அவர்களின் தேர்வு எண்கள் டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. அதன் பிறகு புல்லட்டின் (கெசட்) வெளியிடும்போது தேர்ச்சி பெற்றவர்கள், மாவட்டங்கள் வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், புல்லட்டின் தலைப்பில் பாஸ் ஆனவர்கள் என்பதற்கு, பதிலாக தவறுதலாக பெயில் ஆனவர்கள் என்ற தலைப்பில் பாஸ் ஆனவர்கள் பெயர்கள் போடப்பட்டிருந்தன. இதனால், தேர்வு எழுதிய அரசு ஊழியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

           இந்த தவறால் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக டி.என்.பி. எஸ்.சி. நிர்வாகத்தின் அலட்சியத்தால் அரசுஊழியர்கள் தவிப்பு என்ற தலைப்பில் தினகரன் நாளிதழில் நேற்று ஆதாரத்து டன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சி யாக டி.என்.பி.எஸ்.சி. உடனடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தினகரன் செய்தியால்தான் ஒரே நாளில் எங்களுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது என்றுதங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

            இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், துறை தேர்வுகளில் ஒன்றான லோக்கல் பண்ட் ஆடிட்டிங் டிபார்மெண்ட் தேர்வு முடிவின் தேர்வாணைய செய்தி வெளியீட்டு எண் 6, பக்கங்கள் 591& 597 வரை உள்ள லிஸ்டில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலின் தலைப்பானது, பெயில் என்று பதிவாகியுள்ளது. இதனை மாற்றி தேர்ச்சி பெற்றோர் பட்டியல் என திருத்தி வாசிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive