தமிழகம் முழுவதும் வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், பணி
நிரவல் என்ற பெயரில் ஆசிரியர்களை மாற்றம் செய்ய கல்வி துறை முடிவு
செய்துள்ளது. இதனால், பள்ளிகள் திறக்கும் முன்பே ஆசிரியர்கள் கடும்
பீதியில் உள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும்
கோடை விடுமுறை முடிந்து வரும் 2ம் தேதி திறக்கப்பட உள்ளன.
ஒரு மாதத்துக்கு மேலாக விடுமுறையை கழித்த மாணவர்கள், உற்சாகத்துடன் பள்ளிக்கு ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால், ஆசிரியைகளும், ஆசிரியர்களும் தங்களை எந்த பள்ளிக்கு டிரான்ஸ்பர் செய்ய போகிறார்களோ என்று கடும் பீதியில் உள்ளனர். காரணம், பணி நிரவல் என்ற பெயரில் ஆசிரியர்களை டிரான்ஸ்பர் செய்ய பள்ளி கல்வி துறை பட்டியல் தயாரித்துள்ளது.
ஆரம்ப பள்ளிகளில் 30
மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றும், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 40
மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றும் விகிதாசாரம் இருக்க வேண்டுமென மத்திய
அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த விகிதம் சரியான
முறையில் இல்லை. இதற்கு முக்கிய காரணம், ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் தமிழ்
மீடியம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதுதான்.
மேலும், அரசு பள்ளிகளில் தமிழ் மீடியம் வகுப்புகளை விட ஆங்கில மீடியம்
வகுப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஆசிரியர்
பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு
செய்திருக்கிறது.
இதற்காக அரசு நிர்ணயித்த விகிதத்தை விட அதிக
ஆசிரியர்களை கொண்ட பள்ளிகளில் இருந்து கூடுதல் ஆசிரியர்களை பணி நிரவல் என்ற
பெயரில் டிரான்ஸ்பர் செய்ய கல்வி துறை அதிகாரிகள் முடிவெடுத்து பட்டியல்
தயாரித்து வருகின்றனர்.
இந்த பட்டியல் தயாரிப்பதில் பல்வேறு
குழப்பங்கள் நிலவுகின்றன. 6ம் வகுப்புக்கு மேல் பி.எட் பட்டதாரி
ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும் என்று அரசாணை உள்ளது.
ஆனால், பல பள்ளிகளில் செகண்டரி கிரேடு ஆசிரியர்களே 8ம் வகுப்பு வரையும்
பாடம் நடத்துகிறார்கள். இதை கல்வி துறை அதிகாரிகள் கருத்தில் கொள்ளவில்லை.
மேலும், ஆசிரியைகள் தங்கள் குழந்தைகளை அருகே உள்ள பள்ளிகளில்
சேர்த்திருப்பார்கள்.
தாங்கள் வேலை முடிந்து திரும்பும் போது
தங்கள் குழந்தைகளை அவர்களே வீட்டுக்கு அழைத்து வருவார்கள். இது போல்,
குடும்ப பணிகளில் பல்வேறு வகைகளில் திட்டமிட்டிருப்பார்கள். இந்நிலையில்,
பள்ளிகள் திறந்ததும் திடீரென அவர்களை வேறு இடத்துக்கு மாற்றினால், அவர்கள்
குடும்பம் பாதிக்கப்படும் என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை.
மேலும், ஆசிரியர்களை ஒட்டுமொத்தமாக திடீரென டிரான்ஸ்பர் செய்தால்,
பெரும்பாலானோர் ஆள் பிடித்து டிரான்ஸ்பரை ரத்து செய்யும் முயற்சியில்தான்
ஈடுபடுவார்கள். இல்லாவிட்டால் கோர்ட்டுக்கு செல்வார்கள்.
ஏற்கனவே
நிலுவையில் இருக்கும் அரசுக்கு எதிரான வழக்குகளில் அதிகமான வழக்குகள்,
கல்வி துறைக்கு எதிரானவைதான். மேலும், ஆசிரியர்களை ஒட்டுமொத்தமாக
டிரான்ஸ்பர் செய்தால் அதை ரத்து செய்ய அமைச்சர் அலுவலகம், டிபிஐ வளாகம் என
படையெடுப்பார்கள். இதனால், பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் குழப்பம்தான்
ஏற்படும் என ஆசிரியர் சங்கத்தினர் கூறுகின்றனர்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅரசுப்பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் என்கிறார்கள் ....இந்த உபரி என்பது எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது ?
ReplyDeleteஆசிரியர் மாணவர் விகிதத்திற்கு வரைமுறை என்று ஒன்று உள்ளதா என்ன ? தமிழக அரசு மனது வைக்கலாமே ! மேலும், கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பணிநியமனம் குறித்து யாதொரு தகவலும் காணோம் ?
ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது குறித்து அரசு தயை கூர்ந்து மனது வைக்க வேண்டும்.
Pani niraval sollravanga.... edhukku 2012 la tet pass panna Ellorayum paper1 appointment panning a.... neenga ninacha edhuvum seiyallam seekram order kodunga illaina 70000 future teachers life?
ReplyDeleteTet பாஸ் பன்னியவர்களுக்கு போஸ்டிங் போடாமல் இழுத்தடிப்பால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் , அதே நேரத்தில் அவரவர் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் cbsc பள்ளிகளிலும் சேர்க்க ஆர்வமாக இருக்கிறார்கள் .கல்வி வியாபாரிகளிடம் சிக்கிதவிக்கிறது .அவரவர் குழந்தைகளை முதலில் அரசுபள்ளிகளில் சேர்க்க முன்வரவேண்டும்.
ReplyDeleteplease cmcell@tn.gov.in ku mail anupunga
ReplyDeletecm office phone number 044 25671764 nalai intha number ku call pannalam
No comments
ReplyDeleteTeachers general counselling when?
ReplyDelete