Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SSLC கணித பாடத்தில் குறைந்த தேர்ச்சி விசாரிக்க அலுவலர்களுக்கு உத்தரவு.

          எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில், கணித பாடத்தில், 100 சதவீத தேர்ச்சி குறைந்தது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்விசாரணை செய்ய, மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

          தமிழகத்தில் கடந்த மார்ச், 26ம் தேதி முதல் ஏப்ரல், 9ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு நடந்தது. இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம், 11,552 பள்ளிகளை சேர்ந்த, 10 லட்சத்து, 20, ஆயிரத்து, 749 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.கடந்த, 23ம் தேதி, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், ஒன்பது லட்சத்து, 26 ஆயிரத்து, 138 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். மாநிலம் முழுவதும், 499 மதிப்பெண்கள் பெற்று, 19 மாணவர்கள் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தனர். இதில், அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, ஒன்பது மாணவிகள், 499 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.இதில், 2013-2014ம் கல்வியாண்டில், 60 சதவீத தேர்ச்சி சதவீதம் மற்றும் கணித பாடத்தில், நூற்றுக்கு, நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இது குறித்து, பள்ளிகள் வாரியாக, விசாரணை செய்ய, பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், அனைத்து மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

         இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:கடந்த, 2012-2013ம், கல்வி ஆண்டின் தேர்ச்சி சதவீதமான, 89 சதவீதம் என்ற தேர்ச்சி, சதவீதத்தை விட, அதிகமாக, 2013-2014ம் கல்வி ஆண்டில், 90.7 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த, 2012-2013ம் கல்வி ஆண்டில், ஏழு லட்சத்து, 14 ஆயிரத்து, 522 மாணவர்கள், 60 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றனர். இந்த கல்வியாண்டில், ஏழு லட்சத்து, 10,010 மாணவர்கள் மட்டும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது, கடந்த கல்வி ஆண்டை விட, 60 சதவீதம் தேர்ச்சி பெற்றவர்களின், எண்ணிக்கை விட, 4,522 பேர் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த கல்வியாண்டில், 29,905 பேர் கணித பாடத்தில், நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். ஆனால், இந்த கல்வியாண்டில், 18,682 பேர் மட்டும் கணித பாடத்தில், 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

         கணித பாடத்தில் நூறு சதவீதம்தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில், 11,223 மாணவர்கள் பின் தங்கிஉள்ளது, தெரியவந்தது. இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், மாணவர்களின், 60 சதவீத தேர்ச்சி மற்றும் கணித பாடத்தில், 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டனர். இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், எஸ்.எஸ்.எல்.ஸி.,யில், 60 சதவீதம் மற்றும் கணிதத்தில், 100க்கு, 100 பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறித்த, விபரங்களை பள்ளிகள் வாரியாக சேகரித்து, விசாரித்து தேர்ச்சி சதவீதம் குறைந்தது, குறித்து விளக்கம் பெற்றுள்ளோம். இதுகுறித்து, விபரங்களை, பள்ளி கல்வி துறைக்கு அனுப்ப உள்ளோம், என்றனர்.




2 Comments:

  1. Education is power of Man in the country. that is make good self and awareness growth our life in Economically,. But Now a Education system doesn't support to life Because when the Education is simply available to all the person value is goes to very low.

    ReplyDelete
  2. therchi sadhaveedham kuraivu endru vilakkam korum adhigaarigal arasu palligalil payittruvikka podhumaana aasiriyargalai niyamithirukkirargala endru sindhikka veyndum.
    koottal kazhithal koodadha maanarvalaiyum thamizhil ezhudha padikkavey theriyaadha maanavargalai vaithukondu 100 sadhaveedha therchiyai edhirpaarppadhu sariyaa endru yosikka veyndum...
    aasiriyargal saturday sunday mattrum paruva vidumuraigalil kooda maanavargalodudhaan irukkiraargal.
    samayathil kudumbam marandhu thangal kuzhandhaigalai marandhu velaikkum adhigaarigalin achuruthalukkum bayandhu avargal panikkum velaiyinai sirapppaaga seidhu varugindranar.

    therchi kuraindhadharkku aasiriyargalai varuthedukkaamal.......therchiyai adhigarikkavum kattral karpithal inimaiyaga amayavum maanavargal eedupaattudan padikkavum muyarchi seidhaal nandraaga irukkum
    ..................


    ivan.......
    aasiriyan.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive