இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண்
அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில்,
அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை பிரபாகர் தாக்கல் செய்த மனு: எம்.எஸ்.சி.,- எம்.எட்.,
படித்துள்ளேன். தனியார் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (2013) 84 மதிப்பெண் பெற்றேன். பள்ளிக்
கல்வித்துறை,' இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின்
போது பிளஸ் 2 மதிப்பெண்ணிற்கு 10, பட்டப்படிப்பு 15, பி.எட்.,15, ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கு (டீ.இ.டீ.,) 60 என மொத்தம் 100 'வெயிட்டேஜ்' மதிப்பெண்
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,' என மே 30 ல் உத்தரவிட்டது. இதனால், 10
ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 தேர்ச்சியடைந்தவர்கள் பாதிக்கப்படுவர். பிளஸ் 2
பாடத்திட்டத்தில் அவ்வப்போதுமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 வில்
பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. மதிப்பெண் வழங்கும் முறையில் வேறுபாடு
உள்ளது.
உயிரியல், தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில், மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படுகிறது. பொருளாதாரம், வணிகவியல் பாடப் பிரிவுகளில் செய்முறைத் தேர்வு இல்லை. பட்டப் படிப்புகளுக்கு பல்வேறு பல்கலைகளில், மதிப்பெண் கணக்கிடுவதில் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலை தான். பி.எட்., செய்முறைத் தேர்விற்கு மதிப்பெண் வழங்குவதில், ஒவ்வொரு பல்கலையிலும்வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன. முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவத்திற்கு 'வெயிட்டேஜ்'மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், இந்நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. பாரபட்சம் காட்டப்படுகிறது.
பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். பள்ளிக் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார்.

DTEd posting
ReplyDelete---------------------
வெய்ட்டேஜ் பிரச்சனையை தவிர்க்க டெட் மர்க் மற்றும் எம்ப்லாய்மென்ட் சீனியாரிட்டியை பார்க்கவேண்டும்.இதனால் ஒரு நிரந்தர முடிவு ஏர்படும்.இல்லையெனில் டெட் மார்க் 80% + சீனியாரிட்டி 20% இந்த மெத்தேடில் வெய்ட்டேஜ் மார்க் கொடுக்கவேண்டும். +2 மற்றும் ஆசிரியர் பட்டய மதிப்பெண் பார்ப்பது மிகவும் தவறு.இதனால் பலர் பாதிக்கபடுவர்.
Supper kanna.!!!appa yanna senioritykkum sinciarittikum oollamariathai........
ReplyDeleteTrb .court .
ReplyDeletelife LA over time game velayaduthu
TET marks mattum base seithu posting poduradu dan sariyana teervu like TNPSC
ReplyDeleteApo fresher lam pavam ilaya ?
ReplyDeleteEligibity ku tet mark+ B.ed mark pothum.
intha case ah la posting than delay aaguthu... tet enna puthu puthu rule puguthura idama? ipa neenga question kedatha exam eluthi pass aagurathuku munadi keda yarukum entha pblm illama elarum velaiku vanthurukalam
ReplyDeletetet தேர்வின் ஒரு பாடத்துக்குரிய மிக அதிகபட்ச மதிப்பெண்ணில் இருந்து இறங்குவரிசையில் அவரவர் பிறந்த தேதியின் வயது மூப்பு அடிப்படையில் பணி நியமனத்துக்கு உரியவர்களின் பட்டியலைத் தேர்ந்தெடுத்தால் அது ஒரு நடுநிலையான தேர்ந்தேடுப்பாக அமையும். போன tet பணிநியமனம் அதுபோலத்தான் நடந்தது. இது மிகவும் எளிய முறை ! பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு முறையும் கூட.
ReplyDeleteமேலும், 2013 கல்வியாண்டிற்குரிய காலியிடங்களை மட்டும் நிரப்பாமல், 2014 ம் ஆண்டிற்குரிய காலியிடங்களையும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நிரப்புவதே சாலச் சிறந்தது. ஏனெனில் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக கடும் மன உளைச்சலில் மற்றும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களின் காத்திருப்புக்கு பலன் கிடைக்கும் வகையில் ஏதேனும் ஒரு முடிவினை பள்ளிக்கல்வித்துறை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், பொது மக்களுக்கும் நடக்கும் " நீயா நானா " போட்டியில் பாதிக்கப்படப் போவது மாணவர்களே ! அரசுப் பள்ளிகளில் மாணவர்களே இல்லை இல்லை என்று வெறுமனே பஞ்சப் பாட்டு பாடிக்கொண்டிருப்பதில் பயனில்லை. இதில் தமிழக அரசு தலையிட்டு ஒரு தெளிவான கொள்கை முடிவு எடுக்கப்படவேண்டும் !
ஒரு தனிப்பட்ட ஒரு நபர் தனக்கு சாதகமாக ஒரு நடைமுறை அமைய ஒரு வழக்கைப் போட்டு அது வெற்றியும் பெற்று விட்டால் வருங்கால சமுதாயத்தை எந்த ஒரு தனிநபரும் தீர்மானிக்கலாம் என்றொரு நிலை ஏற்பட்டு அவரவர் தத்தம் போக்கில் இச்சமுதாயத்தை இழுத்துச் செல்லும் அவலநிலை ஏற்படலாம். மாண்புமிகு நீதிபதிகள் இதனை உணரவேண்டும். இந்தச் சுதந்திர நாட்டில் அவரவர் உரிமையை நிலைநாட்ட அவரவருக்கு உரிமை உள்ளது. ஆனால் அவரவர்க்குச் சாதகமான உரிமையை நிலைநாட்ட முயன்றால் அது சமூகக் கேட்டில்தான் முடியும்.
மேலும், ஆசிரியர் மாணவர் விகிதத்தையும் அரசு தளர்த்திக் கொண்டால் அது ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இச்சமுதாயத்தை நல்வழியில் நடத்திச் செல்லும் என்பதில் ஐயமில்லை. தனியார்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு நடத்தப் படுகிறார்கள் என்பதிலும் அரசு மேற்பார்வை செய்ய வேண்டும்.
U r very correct
DeleteYes correct i accept
ReplyDeletetet mark+employment seniority pothum sir, pls dont consider +2 & dted mark. pala per life pathikum padum +2 & dted mark consider panningana
ReplyDelete