பணி நிரவலை பொறுத்த மட்டில் அந்தந்த ஒன்றியங்களிலேயே நிரவல் செய்யப்படும். மாற்று ஒன்றியத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் தொடக்கக்கல்வித்துறையிடம் இல்லை-TNPTF
பணி நிரவலை பொறுத்த மட்டில் அந்தந்த ஒன்றியங்களிலேயே நிரவல் செய்யப்படும். மாற்று ஒன்றியத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் தொடக்கக்கல்வித்துறையிடம் இல்லை. ஆசிரியர்கள் பாதிக்காதவாறு நிரவல் மேற்கொள்ளப்படும் என் இயக்குநர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளிடம் உறுதியளித்துள்ளார். எனவே ஆசிரியர்கள் அச்சமடையத் தேவையில்லை. மேலும்,
கலந்தாய்வு , பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு குறித்து சில வாய்மொழித் தகவல்கள்
பணி நிரவல் : பணி நிரவலை பொருத்தவரை இம்முறை தொடக்கக்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஆகிய இரு துறைகளிலும் நடைபெறுகிறது.
பள்ளிக்கல்வி துறை பணி நிரவலை பொறுத்த வரை, இயன்ற வரை மாவட்டத்திற்குள்ளே நிரவலை செய்ய அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடக்கப்பள்ளித்துறை இடைநிலை ஆசிரியர் பணி
நிரவலை பொறுத்த வரை, ஆங்கில வழிக்கல்வி துவக்கப்பட்ட பள்ளிகள் மற்றும்
இக்கல்வியாண்டில் 2014-15 மாணவர் சேர்க்கை மற்றும் எண்ணிக்கை,
மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரத்திற்கு போதுமானதாக இருந்தால் மாவட்ட
தொடக்கக்கல்வி அலுவலருக்கு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் மூலமாக விண்ணப்பம்
அளித்தால் பணி நிரவல் தவிர்க்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
(குறிப்பாக 1.10.13ப்படியே பணி நிரவல் நடைபெறுகிறது.)
தொடக்கப்பள்ளித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்க பணி நிரவல் இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடக்கப்பள்ளித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்க பணி நிரவல் இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவி உயர்வு : பதவி உயர்வு ஏற்கனவே நாம்
வெளியிட்ட கருத்தின்படி 1.1.2013 முன்னுரிமை பட்டியலும் அதற்கு பின்பு 1.1.2014 முன்னுரிமை பட்டியலும்
பின்பற்றப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009 முதல் நியமிக்கப்பட்ட மாநில அளவிலான
பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் இவ்வாண்டு மாவட்டம் விட்டு மாவட்டம்
மாறுதலில் உறுதியாக கலந்துக்கொள்ளலாம்.
மேற்காணும் தகவல்கள் அலுவலர்கள் மற்றும்
ஆசிரிய கூட்டணி பொறுப்பாளர்கள் மூலம் அளிக்கப்பட்டது. ஆயினும் மேற்காணும்
தகவலை உறுதி படுத்தும் வகையில் கல்வித் துறை இயக்கங்கள் செயல்முறை மூலம்
உறுதிப்படுத்தாமையால், உறுதிப்படுத்தப்பட்டவுடன் முழுத்தகவலும்
வெளியிடப்படும்.
நல்லது நடந்தால் சரி.
ReplyDelete