சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்-அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்"
தமிழக
அரசின் பல்வேறு துறைகளில் காலியாக
உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,' என,அரசு ஊழியர் சங்கமாநாட்டில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
விருதுநகரில்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க
10வது மாவட்ட இரு நாள்
மாநாடு துவங்கியது. முதல் நாளான நேற்று,
அரசு ஊழியர் சங்க கட்டடத்தில்
பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. மாவட்ட
தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை
வகித்தார்.
அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலர் பாலசுப்பிரமணியன், மாநில செயலர் கண்ணன் பேசினர். அரசுத்துறை காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட வேண்டும், மாணவியர் விடுதிகளுக்கு போலீசார் இரவு நேர ரோந்து செல்ல வேண்டும், சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ஜெ., ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...