Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் பயிற்சி படிப்பில் விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவ, மாணவியரும், அரசு பள்ளிகளிலேயே சேரவாய்ப்பு

       ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான  கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது.

         தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்,  சுயநிதி தனியார் பள்ளிகள் என, 538 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. இவற்றில்,  அரசு பள்ளிகளில், 4,860 இடங்களும், தனியார் பள்ளிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 10 ஆயிரம் இடங்களும் உள்ளன. இவ்வளவு இடங்கள் இருந்தும், 4,535 மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் பயிற்சியில் சேரவிண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஆன் - லைன் முறையில், வரும் ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது. விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவ, மாணவியரும், அரசு பள்ளிகளிலேயே சேரவாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, கலந்தாய்வு மற்றும் தனியார் பள்ளிகளில்நேரடி சேர்க்கை என, 9,971 பேர் சேர்ந்தனர். இந்த ஆண்டும், இதே அளவிற்கு, மாணவர் சேர்க்கை இருக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது.




5 Comments:

  1. Velaiyye illa edukku DTED padippu , kasu veen neram veen .

    ReplyDelete
  2. DTED padippathai vida 10 ,& 20 madugalai vangi valarthu athil panam sambathikkalam DTED vast

    ReplyDelete
  3. DTED padikkapporengala AYYO pavam

    ReplyDelete
  4. Engu DTED sernthalum teacher velai illai .

    ReplyDelete
  5. Unmai than

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive