Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல்! புதிய நியமன முறை குறித்து விரைவில் முடிவு.

          வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதன் காரணமாக தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்டசிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள் ளது.
 
          இதையடுத்து, புதிய நியமன முறை குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

          அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், இதே போல் அரசு உதவி பெறும் பள்ளி களிலும் சிறப்பு ஆசிரியர்கள் பணி யாற்றி வருகிறார்கள். இவர்கள் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி பாடங்கள் எடுப்பார்கள்.சிறப்பு ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் சான்றிதழ்அல்லது உயர்நிலை தேர்ச்சியுடன் டி.டி.சி. எனப்படும் தொழில்நுட்பக் கல்வி ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் முடித்திருக்க வேண்டும்.உச்ச நீதிமன்றம் தடைமுன்பு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்த சிறப்பு ஆசிரியர்கள், பின்னர் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப் படையில் நியமிக்கப்பட்டார்கள்.

         இந்த நிலையில், அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர் பதவியில் 724 காலியிடங்களை நிரப்பும் வண்ணம் மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையிடமிருந்து மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு பெற்றது.ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில்ஏறத்தாழ 3,700 பேர் சிறப்பு ஆசிரியர் பணிக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் தயாரிப்புப் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டிருந்த நிலையில், வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. இதில் சிறப்பு ஆசிரியர் நியமனமும் அடங்கும்.

          இதுவரை சிறப்பு ஆசிரியர் பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் மட்டுமே பதிவுமூப்பு அடிப்படையில் நிரப் பப்பட்டு வந்தன.தற்போது இடைநிலை ஆசிரி யர்களை, தகுதித்தேர்வு மதிப் பெண், பிளஸ்-2 மார்க், ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் என வெயிட் டேஜ் மார்க் அடிப்படையில் நியமிக்க அரசு முடிவுசெய்துள்ளது.இந்த நிலையில், தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரி யர்கள்நியமனத்தில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிறப்பு ஆசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி மதிப்பெண் அடிப்படையில் நியமனம் இருக்குமா, அல்லது சிறப்பு தேர்வு ஏதும் நடத்தப்படுமா என்பது தெரியவில்லை.

         விரைவில் புதிய நியமன முறைபுதிய நியமன முறை தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக்கல்வித் துறைக்கு 4 மாதங்களுக்கு முன்னர் கடிதம் அனுப்பியது.ஆனால், புதிய நியமன முறை குறித்து அரசு தீவிரமாக ஆய்வுசெய்துவருகிறது. எனவே, விரைவில் புதிய நியமன முறையை அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




1 Comments:

  1. @Anonymous New weightage.............

    Why this kolaveri! Why do you confuse people those who read comments in Padasalai.
    It is illogical to give 70% weightage for TET. Because its a qualification nothing else. Giving equal weightage for all the courses would be a good decision. We cant say BSc/BA/ BCA/ BCOM is better than HSC, TET is better than BEd. From all the following cources HSC(2 yrs) Bachelor degree (3 yrs) and BEd (1 yr) we have gained knowledge. Equal weightage for all will surely benifit all.

    HSC - 25%
    Bachelor Degree - 25%
    B Ed - 25%
    TET - 25%

    If someone suggests more weightage for a certain course, it gives undue advantage for the candidates who have scored more marks in that course.

    Equal weightage!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive