Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கட்டாய கல்வி சட்டம் காரணமாக ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம்

          ஆசிரியர் கல்வி உள்ளிட்ட அனைத்து கல்வி முறையிலும் உள்ள பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்வி குழும தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது.
 
         உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பட்டங்களை வழங்கினார். முன்னதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் ஆண்டறிக்கை வாசித்து பேசியதாவது: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் 2015-2016ம் கல்வி ஆண்டில் 8 முதுநிலைப் படிப்புகளும், இளநிலை படிப்பு 1, முதுநிலைப் பட்டயப்படிப்பு 2, பட்டயப் படிப்பு 1, சான்றிதழ் படிப்புகள் 21 தொடங்கப்பட உள்ளன. 

               இந்த பட்டமளிப்பு விழாவில் பி.எச்டி மாணவர்கள் 11 பேர், முதுநிலை பட்ட மாணவர்கள் 4,751 பேர், இளநிலை பட்ட மாணவர்கள் 12 ஆயிரத்து 808 பேர், 3,852 பட்டய படிப்பு மாணவர்கள், 92 முதுநிலை பட்டயப் படிப்பு மாணவர்கள் என மொத்தம் 21 ஆயிரத்து 614 பேர் பட்டம் மற்றும் பட்டயங்கள் பெறுகின்றனர். அவர்களில் 227 பேர் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெறுகின்றனர். விழாவில் பங்கேற்ற தேசிய ஆசிரியர் கல்வி குழும தலைவர் சந்தோஷ் பாண்டா பேசியதாவது: கடந்த 1962ல் டெல்லி பல்கலைக் கழகத்தில் முதன் முதலில் தொலை நிலைக் கல்வித் திட்டம் தொடக்கப்பட்டது. 

              அப்போது 1,111 மாணவர்கள் அதன் மூலம் பயன்பெற்றனர். திறந்த நிலை கல்வி முறையின் கீழ், கல்வி முறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. திறந்த முறையிலான தொலை நிலைக் கல்வி முறையால் பொறியியல் மற்றும் தொழில் நுட்பம், மருத்துவ அறிவியல், தகவல் தொழில் நுட்பம் ஆகியவற்றில் சீர்திருத்தம் ஏற்பட்டது. தொலை நிலைக் கல்வியில் பல்வேறு வளர்ச்சியை எட்டினாலும் இது வரை நாம் தொலை நிலைக் கல்விக்காகவும், திறந்த நிலை கல்விக்காகவும் தேசிய அளவிலான கொள்கைகளை உருவாக்கவில்லை. தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் கீழ், தொலைநிலைக் கல்வி கழகம் கொண்டு வரப்பட்டபோது, அதன் தரத்தின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கல்வி வளர்ச்சியில் உலக அளவில் நாம் முக்கிய இடத்தை இப்போது பிடித்துள்ளோம். 

           ஆசிரியர் கல்வியை பொருத்தவரை 1995க்கு பிறகு 1215 என்று இருந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் பிறகு படிப்படியாக 16,000 என்று அதிகரித்துள்ளது. அவற்றில் 13 லட்சம் பேர் படித்தனர். அந்த நிறுவனங்களை தேசிய ஆசிரியர் கல்வி கழகம் ஒழுங்குபடுத்தியது. தற்போது ஆசிரியர் கல்வி உள்ளிட்ட அனைத்து வகை கல்வியிலும் பல ஒழுங்குமுறைகள் மற்றும் சீர் திருத்தங்களை கொண்டு வர முயற்சித்து வருகிறோம். 2009ல் கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்கு பிறகு பள்ளிக் கல்வி முறை பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. அதனால் இப்போது பாடத்திட்டத்தை சீர்திருத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு சந்தோஷ் பாண்டா பேசினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive