தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள்
வழங்கப்படுகிறது. இலவச பாடபுத்தகங்களின் முதல் பக்கத்தில் விலை இல்லா
பாடநூல் என்பதை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பக்கத்தை மட்டும்
கிழித்துவிட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது
கண்டுபிடிக்கப்பட்டது.
குன்னூர் மார்க்கெட்
பகுதியில் தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு
வருவதாக புகார் கிடைத்தது. இதையொட்டி, குன்னூர் ஆர்.டி.ஓ செல்வராஜ்,
தாசில்தார் இன்னாசி முத்து மற்றும் குன்னூர் நகர இன்ஸ்பெக்டர் சிவக்குமார்
தலைமையிலான போலீசார் அதிரடி ஆய்வில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள
ஸ்டேஷனரி கடை ஒன்றில் 10 மற்றும் 12ம் வகுப்பு தமிழக அரசின் இலவச
பாடப்புத்தகங்கள் விற்பனைக்காக வைத்துள்ளது தெரியவந்தது. சோதனையில் தமிழ்,
ஆங்கிலம், கணினி அறிவியல், கணக்கு, வணிகவியல், சமூக அறிவியல், அறிவியல்,
தாவரவியல், விலங்கியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாட புத்தகங்கள்
இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கடை
உரிமையாளர் பத்மநாபனை கைது செய்து, அரசு பாட புத்தகத்தை பறிமுதல்
செய்தனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ செல்வராஜ் கூறுகையில், “அரசின் இலவச
பாடப்புத்தகங்கள் மார்க்கெட் மற்றும் பள்ளிகளிலும் விற்பனை
செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட இடங்களில் ஆய்வு
செய்து பறிமுதல் செய்துள்ளோம். இதுதொடர்பாக இலாகாபூர்வமான நடவடிக்கைக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது“ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...