தமிழகம்
முழுவதும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி,
மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு
இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.
பணியிட
மாறுதல்ஆண்டுதோறும் அரசு பள்ளி களில் பணிபுரியும் ஆசிரியர் கள் பணியிட
மாறுதல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம். அவ்வாறு விண்ணப்பிக்கும்
ஆசிரியர்களுக்கும், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில், மாணவர்
எண்ணிக்கை விகிதத்தின் அடிப்படையில் ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் பணி
நடைபெறும்.
அந்த
வகையில் இந்த ஆண்டிற்கான கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.
அதன் விவரம் வருமாறு:-இன்று உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிட மாறுதல்
மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, நாளை(செவ்வாய்க்கிழமை) நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு,
18-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் கலந்தாய்வு
நடக்கிறது.
மாவட்ட
தலைநகரங்களில்...இதேபோல், இன்று வட்டார வள மைய ஆசிரியர்களுக்கான பணி
நிரவல் மற்றும் கலந்தாய்வு, 18-ந் தேதி உயர்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு, 19-ந் தேதி மேல்நிலைப்பள்ளி
ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு, 23-ந் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு
பணி நிரவல் மற்றும் கலந்தாய்வு, 24-ந் தேதி முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பணி செய்வதற்கான கலந்தாய்வு,
26-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு பணி
நிரவல் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுகள் அந்தந்த மாவட்ட
தலைநகரங்களில் நடைபெறும்.
ippo thodagudu sari..............................YEPPO MUDIYUM?????????????????
ReplyDeleteSurplus lista sollungapa
ReplyDeleteஎல்லாம் சரி அலகுவிட்டு அலகு பணிமாறுதல் உண்டா? இல்லையா?உதவிதொடக்கக்கல்வி அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை வாங்கமறுக்கப்படுகிறது. சில அலுவலகத்தில் வாங்கப்படுகிறது.ஈன் இந் த முரண்பாடு.
ReplyDelete