கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், இழப்பீடு நிர்ணயிக்க, ஓய்வு பெற்றநீதிபதியை
நியமிக்க, அரசு உத்தரவு பிறப்பிக்காததால், சென்னை உயர்
நீதிமன்றத்தில்,அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை,
இம்மாதம், 19ம் தேதிக்கு,தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில், ஸ்ரீகிருஷ்ணா துவக்கப் பள்ளியில், ஏற்பட்ட தீ விபத்தில், 92, குழந்தைகள் பலியாகினர். 14குழந்தைகளுக்கு தீ காயங்கள் ஏற்பட்டன. 2004, ஜூலையில், இந்த துயர சம்பவம் நடந்தது. தீ விபத்தில் பலியான,காயமடைந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு வழங்க வேண்டிய, போதிய இழப்பீட்டை நிர்ணயிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பலியான குழந்தைகளின் தந்தை இன்பராஜ் என்பவர், மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன், இழப்பீட்டை நிர்ணயிக்க,ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகத்தை நியமித்தார்.
2012, அக்டோபரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, அரசு தரப்பில், 'அப்பீல்' மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார்,சத்தியநாராயணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. 'அப்பீல்' மனுவை தள்ளுபடி செய்து,தனி நீதிபதியின் உத்தரவை, உறுதி செய்தது. கடந்த, ஏப்ரலில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், இன்பராஜ், தாக்கல் செய்த மனு: தனி
நீதிபதியின் உத்தரவை,இரு வாரங்களில் அமல்படுத்தும் படி, 'டிவிஷன் பெஞ்ச்'
உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவின் நகலை,அதிகாரிகளுக்கு அனுப்பி
வைத்தேன். இதுவரை, எந்த நடவடிக்கையும் இல்லை. நீதிமன்ற உத்தரவை, அதிகாரிகள்
மதிக்கவில்லை. அதன்மூலம், நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர்.
அதற்காக,சட்டப்படி, தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், பள்ளிக் கல்வித்
துறை செயலர் சபிதா ஆகியோரை,தண்டிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில்
கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், சத்தியநாராயணன்
அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில்,
வழக்கறிஞர்எஸ்.தமிழரசன், அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர்
கிருஷ்ணகுமார் ஆஜராகினர். விசாரணை, இம்மாதம், 18ம்தேதிக்கு, தள்ளி
வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...