அரசு ஊழியர்களை
நேர்மையாகவும், திறமையாகவும் பணியாற்றும்படி, ஊக்கப்படுத்த வேண்டும்' என, அனைத்து துறைகளுக்கும்,
மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், நேர்மையாகவும், திறமை யாகவும் செயல்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை, ஒவ்வொரு துறையும் எடுக்க வேண்டும். மனிதவள மேலாண்மையில், ஊழியர்களின் திறமையை மதிப்பீடு செய்வது முக்கியமானது. சார்பு செயலர் மற்றும் அதற்கு கீழான நிலையில் உள்ள ஊழியர்கள், திறமையாக செயல்பட்டால், அதை அங்கீகரிக்கும் வகையில், வருடாந்திர அடிப்படையில், விருதுகள் வழங்க வேண்டும். அத்துடன் மாதாந்திர அடிப்படையிலும், சிறப்பாக செயல்படும் ஊழியர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கி கவுரவப்படுத்தலாம். திறமையாக செயல்படும் ஊழியர்களுக்கு, விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிப்பதோடு, அவர்களின் புகைப்படங்களையும், அனைத்து துறைகளின் இணைய தளத்திலும், இடம் பெறச் செய்ய வேண்டும். ஒவ்வொரு துறையின் மற்றும் பிரிவின் ஊழியர்களும், பணியாளர் நலத்துறை உட்பட, சில துறைகளின் அதிகாரிகளுடன், அவ்வப்போது கலந்து பேச அனுமதிக்க வேண்டும். அப்போது, ஊழியர்கள் தெரிவிக்கும் யோசனைகளை, அதிகாரிகள் கேட்க வேண்டும்.

ஒவ்வொரு துறையிலும்
ஆலோசனை பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும். அதில், பல்வேறு பிரச்னை கள் தொடர்பாக, ஊழியர்கள்,
தங்களின் ஆலோசனைகளை, கடிதம் மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால், பிரச்னை
களுக்கு நல்ல தீர்வு காண முடியும். ஊழியர்கள், நேர்மையாகவும், திறமையாகவும் செயல்படுவதை
ஊக்கப்படுத்த, பயிற்சி திட்டங்களையும் அவ்வப்போது நடத்தலாம். இவ்வாறு, மத்திய பணியாளர்
நலத்துறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...