அங்கன்வாடி மையங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களால், நடப்பாண்டு மாணவர் சேர்க்கை குறையக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
அங்கன்வாடி
மையங்களில் மூன்று முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகள் சேர்த்துக்
கொள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு மையத்துக்கும் ஒரு பொறுப்பாளர், உதவியாளர்,
சமையலர் என மூவர் நியமிக்கப்படுகின்றனர். மாநிலம் முழுவதும் 42 ஆயிரம்
மையங்கள்
உள்ளன. குறைந்தது 85 ஆயிரம் பேர் பணியில் இருக்க வேண்டும். கடந்த மே மாத
நிலவரப்படி, 70 ஆயிரம் பேரே உள்ளனர். 2012க்கு பின், புதிய பணியாளர்கள்
நியமிக்கப்படவில்லை. பணியில் இருந்த 30 சதவீத ஊழியர்கள், கடந்த இரண்டு
ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்று விட்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட மையங்களில்,
குழந்தைகளை பாதுகாக்க, காலை முதல் மாலை வரை கவனமுடன் பார்த்துக் கொள்ள,
அவர்களுக்கு உணவு தயாரித்து வழங்க ஆளில்லை. அதனால், நடுத்தர குடும்பமாக
இருந்தாலும், பணம் செலவானாலும் பரவாயில்லை என நினைத்து தனியார் பள்ளிகளை
நாடிச் செல்கின்றனர். இதனால், அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை
குறையக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
தமிழக
அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் பாக்கியம் கூறுகையில், ""கடந்த
1982ல் பணியில் இணைந்த பலர் விரைவில் ஓய்வு பெற உள்ளனர். 2012 வரை,
கோரிக்கைகளை ஏற்று, குறைந்த அளவு பணியாளர்களையாவது நியமித்தனர்.கடந்த
இரண்டு ஆண்டுகளாக, அதுவும் இல்லை. ""கடந்தாண்டு மாவட்ட தலைநகரங்களில்
உண்ணாவிரதம், சென்னையில் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தியும்,
அங்கன்வாடி மீது அரசு அக்கறை செலுத்தவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மெட்ரிக்,
நர்சரி பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவர்களுடன் போட்டி போட வேண்டிய
நிலைமை உள்ளது. அதற்கேற்ப ஊழியர் நியமிக்க வேண்டும். இல்லையெனில்,
அங்கன்வாடிகளில் மாணவர் சேர்க்கை குறைவதை தடுக்க முடியாது,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...