ஸ்பெல்லிங் பீ போட்டியில் வென்ற அன்சுன், ஸ்ரீராம் |
ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் (ஸ்பெல்லிங் பீ) தேசிய
போட்டியில் அமெரிக்க இந்திய மாணவர்கள் ஸ்ரீராம் ஜெ ஹத்வார், அன்சுன் சுஜோய்
ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இப்போட்டியில் தொடர்ந்து 7 முறை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே வென்று
சாதனை படைத்துள்ளனர். தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்பான இப்போட்டியை
லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பார்த்து ரசித்தனர்.
14 வயதாகும் ஸ்ரீராம் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நியூயார்க்
நகரைச் சேர்ந்தவர். டெக்சாஸை சேர்ந்த அன்சுனுக்கு 13 வயதாகிறது. அவர் 7-ம்
வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த ஆண்டைப் போலவே ஸ்ரீராம், அன்சுன், மிசௌரியைச் சேர்ந்த கோகுல்
வெங்கடாசலம் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. இதில் ஸ்ரீராம், அன்சுன்
ஆகியோர் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றனர். இதற்கு முன்பு கடைசியாக
1962-ல் இருவர் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றனர்.
இப்போட்டியில் மொத்தம் 12 பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இதில் 6 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
Parattukkal arumai
ReplyDelete