#தற்காலிகமாக மின் இணைப்பு பெற முடியுமா?
பொது இடங்களிலோ, மின் இணைப்பு இல்லாத தனியார் இடங்களிலோ நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்தும்போதும், கட்டிடங்களுக்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும்போதும் மின்சாரம் தேவை எனில் தற்காலிக இணைப்பு பெறமுடியும். இதற்கு சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரியை தொடர்புகொள்ளலாம்.
ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு மின் இணைப்பை நீட்டிக்க குறைந்தது ஒரு வாரம், அதிகபட்சம் ஒரு மாதம் ஆகும். கூடுதல் மேம்பாட்டுடன் டிரான்ஸ்ஃபார்மர் இல்லாமல் இணைப்பை நீட்டிக்க 2 மாதங்களும், டிரான்ஸ்ஃபார்மர் வைக்க 3 மாதங்களும் ஆகும்.
#உயர் மின்னழுத்த இணைப்பு கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும்?
மின் இணைப்பை நீட்டிக்க குறைந்தது 2 மாதம், அதிகபட்சம் 5 மாதம் ஆகும். அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் மாற்றி மின் இணைப்புத் தர 6 மாதங்களும், சிறப்பாக துணை மின் நிலையம் அமைத்து மின் இணைப்பு தர அதிகபட்சம் 9 மாதங்களும் ஆகும்.
#மின் இணைப்பை இடமாற்றம் செய்ய முடியுமா?
குறிப்பிட்ட நிபந்தனைகளின்படி மின் இணைப்பை இடமாற்றம் செய்யலாம். மீட்டரையும் சேர்த்து மாற்றம் செய்ய 25 நாட்கள் ஆகும். மின் தொடரை மாற்றுவதற்கு 2 மாதங்கள் ஆகும். டிரான்ஸ்பார்மர் கட்டமைப்பு மாற்றம் செய்ய 3 மாதங்கள் ஆகும்.
#மின் இணைப்பின் பெயரை மாற்ற முடியுமா?
மின் இணைப்பு பெயரை சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாற்ற முடியும். மின் இணைப்பு பெற்றவரின் அனுமதி அல்லது கட்டிட உரிமையாளருக்கான சான்று, சொத்து வாங்கியதற்கான பத்திரம், வரி கட்டிய ரசீது போன்ற ஆவணங்களின் அடிப்படையில் ஒரு வாரத்தில் மாற்ற முடியும்.
#பயன்பாட்டு முறையை எப்படி மாற்றுவது?
வீடுகளின் பயன்பாட்டை வணிக பயன்பாட்டுக்கோ, வணிக பயன்பாட்டை வீட்டு பயன்பாட்டுக்கோ மாற்ற வேண்டுமென்றால், அதற்குரிய கட்டண வீதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு விண்ணப்பித்து ஒரு வாரத்தில் மின் துறையினர் மாற்றம் செய்து தருவார்கள்.
#எந்த இணைப்பின் கட்டண வீதத்தை மாற்ற முடியாது?
எந்த வகையான மின் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோரும், தங்களது மின் இணைப்பு மற்றும் கட்டண வீதத்தை தாழ்வழுத்த விவசாய இணைப்புக் கட்டண வீதத்துக்கு மாற்ற முடியாது. விவசாய இணைப்புகள் பல்வேறு சட்ட விதிகளின்படி தனியாக வழங்கப்படுகின்றன.
#மின் இணைப்பு மற்றும் கட்டண வீதம் தொடர்பான மனுக்கள், புகார்களுக்கு யாரை அணுக வேண்டும்?
உயரழுத்த மின் இணைப்புதாரர்கள், சம்பந்தப்பட்ட பகுதி செயற்பொறியாளரை அணுக வேண்டும். மற்ற நுகர்வோர் உதவி செயற்பொறியாளரிடம் தங்களின் மனுக்கள், விண்ணப்பங்களை அளிக்கலாம். கீழ்நிலை அதிகாரிகளிடம் சென்றால் கால விரயம் ஏற்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...