நடந்து
முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னை மாவட்டத்தில் அரசு மற்றும்
தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை அரசுத்
தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த
23ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது சென்னை மாவட்டத்தில் எத்தனை பள்ளிகள்
100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன என்ற ரேங்க் பட்டியலை தேர்வுத் துறை தயாரித்தது.
அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 163 பள்ளிகள் 100 சதவீத
தேர்ச்சியை பெற்றுள்ளன. மேலும், நிர்வாக வாரியாக பள்ளிகள் பெற்றுள்ள
சதவீதப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில்
சென்னை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 87.96 சதவீத தேர்ச்சியும், அரசு
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் 77.87 சதவீத தேர்ச்சியும், சென்னை
மாநகராட்சி பள்ளிகள் 88.89 சதவீத தேர்ச்சியும், நிதியுதவி பெறும் பள்ளிகள்
90.10 சதவீத தேர்ச்சியும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 95.56 சதவீத
தேர்ச்சியும், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 96.13 சதவீத தேர்ச்சியும்,
சிறப்பு பள்ளிகள் 84.21 சதவீத தேர்ச்சியும் எட்டியுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...