அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் பல இலட்சம்
கட்டி படிக்க வைக்கின்றனர். ஆனால் அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களை
மட்டும் பல்வேறு விதங்களில் சிரமத்துக்குள்ளாக்குகிறார்கள்.
இன்றும் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் அரசு பள்ளி மாணவர்களை
அவரவர்களின் வீட்டில் இருந்து காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற
பலவற்றையும் கொண்டு வரக்கூறி நிர்பந்திக்கிறார்கள். அவ்வாறு கொண்டு வரும்
மாணவர்களுக்கு மட்டும் வகுப்பு லீடர் மற்றும் சிறப்பு தனி சலுகைகளை
வழங்குகின்றனர். இது போல் செயல்படும் ஒரு சில அரசு பள்ளி ஆசிரியர்களால்
ஒட்டு மொத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதும் பொதுமக்களிடையே தேவையற்ற
வெறுப்புணர்ச்சி ஏற்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களையும் தங்கள் வீட்டு பிள்ளைகளாக நினைக்க வேண்டும் ஆசிரியர்கள.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...