மாணவர்களுக்கான
கல்வி உதவித்தொகை விரைவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அப்துல்ரஹிம்
உத்தரவிட்டுள்ளார்.பிற்படுத்தப் பட்டோர்,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின்
செயல்பாடுகள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட திட்ட பணிகள் செயல்பாடுகள்
குறித்த ஆய்வு கூட்டம் அமைச் சர் அப்துல்ரஹிம் தலைமையில் சென்னையில்
நடந்தது. கூட்டத்தில் அமைச் சர் அப்துல்ரஹிம்
பேசியதாவது:பிற்படுத்தப்பட்டோர் ,
மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவர்கள்,
கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பல்வேறு ஆக்கப்பூர்வமான
நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டங்கள்
உரிய நேரத்தில் மக்களை சென்றடைய அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
வாடகை கட்டிடங்களில் இயங்கிவரும் அனைத்து விடுதிகளுக்கும், சொந்த கட்டிடம்
கட்டுவதற்கு தகுதியான நிலங்களை தேர்வு செய்ய அனைத்து விடுதிகளையும்
அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள் மாதம்தோறும் ஆய்வு செய்ய
வேண்டும். மேலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில்
சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...