ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74
ஆயிரம் ஆசிரியர்களுக்கும் யூஜிசி போல ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் வழங்க
ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இந்த தேர்வில் 74 ஆயிரத் துக்கும்
மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரி யர்களும் தேர்ச்சி
பெற்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு
செல்லும். 7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக்
கொள்ளலாம்.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
அடையா ளமாக அவர்களின் பதிவு எண், மதிப்பெண், தேர்ச்சி பெற்ற ஆண்டு உள்ளிட்ட
விவரங்கள் அடங்கிய தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தேர்ச்சி
பெறும் ஆசிரியர்க ளுக்கு சான்றிதழ் அச்சிட்டு அவர் களிடம் ஒப்படைப்பது
ஆசிரி யர் தேர்வு வாரியத்துக்கு பெரும் பணியாக உள்ளது.
ஆன்லைனில் தேர்ச்சி சான்றிதழ்
பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) நெட்
தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ்களை ஆன்லைனில்தான் (இ-சர்டி பிகேட்)
வழங்கி வருகிறது. தேர்ச்சி பெற்றவர்கள் பதிவு எண், பிறந்த தேதி,
தேர்வெழுதிய மாதம், ஆண்டு ஆகிய விவரங் களை குறிப்பிட்டு யூஜிசி இணைய
தளத்தில் இருந்து சான்றிதழ் களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த
நிலையில், யூஜிசியைப் போன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கும் ஆன் லைனில் தேர்ச்சி சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு
வாரியம் திட்டமிட்டுள்ளது.
புதிய திட்டம்
தேர்வு வாரிய குழுவின் ஒப்புதல் கிடைத்ததும்
இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய
அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம், தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் பேரும் தேர்ச்சி சான்றிதழை ஆன்லைனிலேயே பெற்று விடலாம்.
7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக் கொள்ளலாம்.
TNTET தொடரும் குழப்பங்கள்:
ReplyDelete.01 மதிப்பெண்ணில் கூட வேலை பறிபோகலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
1. BA/BSc மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு சான்றிதல் சரிபார்ப்பு மையத்திலும் ஒவ்வொரு மாதிரி கணக்கிடப்பட்டுள்ளது.
2. UGC & NCTE வழிகாட்டி நெறிமுறைகள் MAJOR & ALLIED பாடங்களைக்கொண்டு மட்டுமே மதிப்பெண் சதவீதத்தைக் கணக்கிடவேண்டும் என்று கூறுகின்றது.
3. நமது பட்டங்களும் (DEGREES/CONVOCATION CERTIFICATES) MAJOR & ALLIED பாடங்களைக்கொண்டு மட்டுமே கணக்கிட்டு முதல் வகுப்பு / இரண்டாம் வகுப்பு என வழங்கப்பட்டுள்ளன.
4. பெரும்பாலான சென்டர்களில் மொழிப்பாடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களின் மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டுள்ளன.
5.சில சான்றிதல் சரிபார்ப்பு மையங்களில் NCC/NSS/EXTRA CURRICULAR ACTIVITIES போன்ற பாடங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை
6. அரசு கல்லூரிகளில் BA/BCOM/MA/MSc/BEd போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையின் (ADMISSION) பொழுது இதுவரை MAJOR & ALLIED படிப்புகளின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.
7. கணிதம்/ அறிவியல் துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு மொழிப்பாடங்களையும் (TAMIL / ENGLISH) சேர்த்து கணக்கிடுவதால் CUT OFF குறைய வாய்ப்பு அதிகம்.
.01 மதிப்பெண்ணில் கூட வேலை பறிபோகலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். இது குறித்து பல்கலைகழகப் பேராசிரியர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டேன் .
நாளை ஒரு வழக்கினைப் பதிவு செய்கிறேன். வெற்றி நமதே
Balance PLEASE TET PASSED CANDIDATES EAITED SCHOOL POSTINGS PUDUNGA
ReplyDelete