Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அழைப்பு கடிதம் இல்லாவிட்டாலும் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கலாம்

          காஞ்சிபுரம்: ''அழைப்பு கடிதம் இல்லாவிட்டாலும், பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்,'' என, அண்ணா பல்கலையின் சேர்க்கை பிரிவு இயக்குனர் நாகராஜன் பேசினார்.

             பொறியியல் கலந்தாய்வை பதற்ற மின்றி எதிர்கொள்ளும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மற்றும் சென்னை தொழில்நுட்ப பயிலகம் ஆகியவை இணைந்து, 'உங்களால் முடியும்' நிகழ்ச்சியை, காஞ்சிபுரத்தில் நேற்று நடத்தின. அண்ணா பல்கலையில், பொறியியல் கலந்தாய்வு இம்மாதம் கடைசி வரை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் மாணவ, மாணவியர் பதற்றமின்றி கலந்து கொள்வதற்கு, 'தினமலர்' நாளிதழும், சென்னை தொழில்நுட்ப பயிலகமும் இணைந்து, 'உங்களால் முடியும்' நிகழ்ச்சியை, நேற்று, காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் நடத்தின. காலை 10:00 மணிக்கு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு, சென்னை தொழில்நுட்ப பயிலகம் சார்பில், கல்லூரிகளின் தரப்பட்டியல் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது. சென்னை தொழில்நுட்ப பயிலக நிர்வாகி, ஸ்ரீராம் முன்னுரை ஆற்றினார்.


அழைப்பு கடிதம் பிரச்னை இல்லை:




தொடர்ந்து, அண்ணா பல்கலையின் சேர்க்கை பிரிவு இயக்குனர் நாகராஜன் பேசியதாவது: பல்கலைக்கு செலுத்த வேண்டிய தொகையை, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வங்கியில் வரை வோலையாக எடுத்தோ அல்லது கலந்தாய்வு அலுவலகத்தில் பணமாகவோ செலுத்தலாம். அடையாளம் தெரியாத நபரிடம், பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் வீட்டிற்கு வரவில்லை என்றால், கவலைப்பட தேவையில்லை. நாளிதழ்களில் வெளியாகும் கலந்தாய்வு அட்டவணைப்படி, தங்களுடைய, 'கட் - ஆப்' மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். பல்கலைக்கழக வளாகத்தில், அழைப்புக் கடிதத்திற்கான நகலை பெற்று, கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, அதை விளக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், கலந்தாய்வு தொடர்பான விளக்கப்படம் காண்பிக்கப்பட்டது.


வெறும் பொறியியல்:




அதை தொடர்ந்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது: பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும்போது, கடந்த காலத்தையும், தற்போதைய வேலைவாய்ப்பு சூழலையும் வைத்தே, பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். அப்படி செய்யக் கூடாது. எதிர்காலத்தில் எந்த துறையில் அதிக முதலீடு இருக்கும் என்பதை பார்த்து, பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும். ஏரோநாட்டிக்கல் துறைக்கு, நம்நாட்டில் எந்த பகுதியில் வேலைவாய்ப்பு உள்ளது என, இதுவரை எனக்கு தெரியவில்லை. ஆனால், அந்த துறையை ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். உட்கட்டமைப்பு, சக்தி, உற்பத்தி, மின்சாரம் போன்ற துறைகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் அடுத்த சில ஆண்டுகளில் முதலீடு செய்ய உள்ளன. எனவே, அது போன்ற துறைகளை தேர்வு செய்து படிப்பது நல்லது. வெறும் பொறியியல் மட்டும் படிப்பது நாளைக்கு வேலை தராது. பாடப்பகுதிகளை தாண்டியும் நம்முடைய அறிவை பெருக்க வேண்டும். கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது ஆண்டிலிருந்து, கேட் தேர்வுக்கு தயாராகுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பு பரிசு: நிகழ்ச்சியின் முடிவில், பொறியியல் கலந்தாய்வு மற்றும் பாடப்பிரிவு தொடர்பாக, மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டனர். அதற்கு அண்ணா பல்கலையின் சேர்க்கை பிரிவு இயக்குனர் நாகராஜன், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி ஆகியோர் பதிலளித்தனர். சிறந்த கேள்வி கேட்ட, 10 பேருக்கு, 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'பென் - டிரைவ்' பரிசாக வழங்கப்பட்டது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive