ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள,
'அரசாணை 363'ஐ எதிர்த்து, ஓய்வூதியதாரர்கள்
வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுகுறித்து,
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க செயலர், சுப்ரமணியன்
கூறியதாவது: ஓய்வூதியம் தொடர்பாக, அரசு சமீபத்தில் வெளியிட்ட,
'அரசாணை 363' ஓய்வூதியர்களுக்கு பாதகமாக உள்ளது. புதிய
அரசாணையின்படி, ஓய்வூதியம் குறையும். எனவே, புதிய அரசாணையை
எதிர்த்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இதுகுறித்து,
சங்க உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்க, சங்க செயற்குழுக் கூட்டம்,
வரும், 14ம் தேதி, பல்லாவரம்
தொடக்கப் பள்ளியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில்,
புதிய அரசாணை குறித்து, சங்க
துணைத் தலைவர் ராஜகோபால் விளக்க
உள்ளார். உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்து, செயற்குழு
உறுப்பினர் சண்முகவேலு விவரிக்க உள்ளார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...