நாட்டின்
பிரதமராக மோடி பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் தனது தலைமையின் கீழ்
பணியாற்றும் அதிகாரிகளுக்கு முக்கியமான ஒரு உத்தரவை மோடி
பிறப்பித்துள்ளார். அதில் மூன்று முக்கிய விஷயங்களில் தீவிர கவனம்
செலுத்துமாறு அவர் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். அதன்படி மத்திய மாநில
அரசுகளிடையே பரஸ்பர இணக்கம், பொதுமக்களின் புகார் மற்றும் குறைகள்
தொடர்பில் துரித நடவடிக்கை, ஆயுத படைப்பிரிவுக்கு நீண்ட காலமாக
வழங்கப்படாமல் உள்ள தளவாடங்களை உடனே வழங்குதல் ஆகியவற்றுக்கு
முக்கியத்துவம் தருமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே காலதாமத்தை தவிர்க்குமாறு
அதிகாரிகளுக்கு மோடி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தனது அலுவலகத்தில்
உள்ள அதிகாரிகளிடம் பொதுமக்கள் தரப்பில் சமூக வலைதளங்கள், அரசுத்துறை
இணையதளங்கள் ஆகியவற்றில் தெரிவிக்கப்படும் புகார்கள் தொடர்பாக உரிய
நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக விமானங்கள், ரெயில்
டிக்கெட்டுகள், பயணங்கள், தொலைத்தொடர்புத்துறை, வங்கி, சுகாதாரம் மற்றும்
ஓய்வூதியம் ஆகிய புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணுமாறு அவர்
அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...