தமிழகத்தில்,
54,439 அங்கன்வாடி மையங்களுக்கு, குழந்தைகளின் சுகாதாரம் பேண, 2.72 கோடி
ரூபாய் செலவில், சுகாதாரப் பை வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த
குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 54,439
அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இம்மையங்களில், பிறந்த குழந்தைகள்
முதல், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, இணை உணவு, முன்பருவக் கல்வி,
மருத்துவ
சேவை போன்றவை அளிக்கப்படுகின்றன. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை
உயர்த்துவதுடன், அவர்களின் மனம், உடல் மற்றும் சமூக ரீதியான வளர்ச்சிக்கு,
அடித்தளம் அமைக்கப்படுகிறது. குழந்தைகளை சுத்தமாகப் பேணி, சுகாதார நிலையை
மேம்படுத்த, அங்கன்வாடி மையங்களுக்கு, 2.72 கோடி ரூபாயில், சுகாதாரப் பை
வழங்கப்படும் என, கடந்த பட்ஜெட், மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மையங்களுக்கு சுகாதாரப் பை வழங்கப்பட்டுள்ளது. இப்பையில், ஆறு
துண்டு, இரண்டு நகம் வெட்டும் கருவி, மூன்று சீப்பு, ஒரு முகம் பார்க்கும்
கண்ணாடி, 12 ஆயுர்வேத சோப் ஆகியவை உள்ளன. இப்பையின் மதிப்பு, 500 ரூபாய்.
இப்பையில் உள்ள பொருட்களை பயன்படுத்தி, அங்கன்வாடி மையங்களுக்கு வரும், 11
லட்சம் குழந்தைகளுக்கு, கையை சுத்தமாக கழுவ, கற்றுக் கொடுக்க வேண்டும். கை
விரல் மற்றும் கால் விரல்களில் உள்ள நகங்களை வெட்டி பராமரிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...