வேப்பங்கொட்டையை மாணவி மீது வீசிய, எட்டாம்
வகுப்பு மாணவனை கண்டித்ததே, மாணவியரை ஆபாச படம் பிடித்ததாக, ஆசிரியர் மீது,
வீண்பழி சுமத்தியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில், பா.சுந்தரம் செட்டியார் அரசு
மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி ஆசிரியர் வினோ, தன் மொபைல் போனில்,
மாணவியரை ஆபாசமாக படம் எடுத்ததாக கூறி, நேற்று முன்தினம், பள்ளியை பெற்றோர்
முற்றுகையிட்டனர். தகவலறிந்த, வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள்,
போலீசார், சம்பவ இடத்தில் விசாரித்தனர்.
இது குறித்து,போலீசார் கூறியதாவது:
ஆசிரியர் மீதான, குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை: அவரது மொபைல் போனை
கல்வித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், ஆபாசமான படங்கள் ஏதும்
இல்லை. இதே பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர், வகுப்பு
நடக்கும்போது, வேப்பங்கொட்டையை, பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவி மீது, வீசி
உள்ளார். இதை, அந்த மாணவி, வகுப்பு ஆசிரியர் வினோவிடம் கூறியுள்ளார்.
நாடகம்:
மாணவரை கண்டித்த ஆசிரியர், பெற்றோரை அழைத்து வரும்படி கூறிஉள்ளார்.
மாணவனின் பெற்றோர் மற்றும் சிலர் சேர்ந்து, ஆசிரியரை பழிவாங்க, இப்படி ஒரு
நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். மேலும், பொதுமக்கள் சார்பில், மனுவாக எழுதி,
200 பேர் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர். தனிப்பட்ட நபர் எவரும் புகார்
தரவில்லை. இருந்தும், புகார் ஏற்பு மனு சான்றிதழ் கொடுத்துள்ளோம்.
தனிப்பட்ட நபர் புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு, அவர்கள்
கூறினர்.
முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறியதாவது: புகார் கூறப்படும் ஆசிரியர்
மற்றும் பள்ளி நிர்வாகம் குறித்து, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில்,
என்னை, நேற்று சந்தித்தனர். அவர்கள், ஆசிரியர் வினோ மீது, நற்சான்றிதழ்
தந்து, பள்ளி மீது, தவறான தகவல்களை பரப்பி வருவதாக புகார் கூறினர். உண்மை
தெரியாமல் நடவடிக்கை எடுத்தால், பள்ளி நிர்வாகம், ஆசிரியர் பாதிப்பதுடன்,
மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என்பதால், தீர விசாரிக்கிறோம். இவ்வாறு
அவர் கூறினார்.
This comment has been removed by the author.
ReplyDeleteஅன்புள்ள ஆசிரிய பெருமக்களே !
ReplyDeleteஉங்களுடைய உண்மையான மாணவர்கள் மீதுள்ள அக்கறை புரிகிறது.ஆனால் அந்த மரமண்டைகளுக்கு தெரிவதில்லை.ஆசிரியர்கள் மீது எரிச்சலுடன் திரியும் கும்பல் ஒன்று உங்கள் அருகிலேயே அலையும்.எனவே எச்சரிக்கை. ஆசிரியர் வினோ , பையனுடைய பெற்றோரை வரச்சொன்னதற்குப் பதிலாக பொண்ணுடைய பெற்றோரை வரச்சொல்லி விசயத்தை சொல்லியிருந்தால் அவர்கள் முடிவெடுத்து இருப்பார்கள். பையனை ஊருக்குள் போகும்போது கீழே தூக்கிப்போட்டு மிதித்திருப்பார்கள். பையனின் பெற்றோரும் அவர்களிடம் பிரச்சனை வேண்டாம் என கெஞ்சியிருப்பார்கள். இதில் உண்மையிலேயே பாராட்ட வேண்டியவர்கள் என்றால் காவல் துறையும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகமும் ,மு.க.அ. திரு.அய்யண்ணன் அவர்களும் தான். வேப்பங்கொட்டையை தூக்கி போட்ட அந்த புறம்போக்கின் ________________பிதுக்கவேண்டும். இது மாதிரி பிரச்சனை எப்போது பள்ளியில் வரும் என காத்துக் கொண்டு ஊருக்குள் ஐந்து அல்லது ஆறு வெட்டிப்பயல்கள் திரிவார்கள். ஆசிரியர்களே மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் பணியை செவ்வனே செய்யுங்கள். மீதியை மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்
பையன் மீதுதான் தவறு என்றால் கண்டிப்பாக TC வழங்க வேண்டும் அப்போதுதான் மற்ற மாணவர்கள் இதுபோன்ற தவறு செய்ய பயப்படுவர்
ReplyDelete