Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

        ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. சென்னை மாணவர் அனிகேட் முரேகர் அகில இந்திய அளவில்19-வது இடத்தை பிடித்தார்.

           ஐ.ஐ.டி. என்பது தொழில்நுட்ப கல்வி கற்கும் மத்தியஅரசின் கல்லூரி. இந்தியாவில் சென்னை ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி., கரக்பூர், ஐ.ஐ.டி. உள்பட மொத்தம் 16ஐ.ஐ.டி.கள் உள்ளன. இந்த ஐ.ஐ.டி.களில் மாணவ-மாணவிகள் பி.டெக். சேர்வதற்கு 9ஆயிரத்து 784 இடங்கள் உள்ளன.இந்த இடங்களில் சேர்வதற்கு மாணவர்கள் முதலில் ஒரு தேர்வையும் அதில் தேர்ச்சி பெற்றவர்கள்இறுதி தேர்வையும் எழுத வேண்டும்.

             அதன்படி இந்த வருடம் முதல் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 11 லட்சம் பேர் எழுதினார்கள். அவர்களில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 997 பேர்தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் இறுதி தேர்வை கடந்த மே மாதம் 25-ந்தேதி எழுதினார்கள். அந்ததேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. 27 ஆயிரத்து 151 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் சென்னை பிட்ஜீநிறுவனத்தில் பயிற்சி பெற்ற 344 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் முதல் மாணவர்இந்த நிறுவனத்தில்பயிற்சி பெற்றவரும் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் படித்த மாணவருமான அனிகேட் முரேகர்  அகில இந்திய அளவில் 19-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் இவர்தான் முதல் மாணவர். இவர் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார்.அதே பள்ளியில் படித்த ரவி தேஜா 42-வது ரேங்க் பெற்றுள்ளார்.கீழ்ப்பாக்கத்தில் பெற்றோருடன் வசிக்கிறார். இவரது தந்தை ஏ.வி.கிருஷ்ணமூர்த்தி இந்துஸ்தான் பெட்ரோலியம்நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். அம்மா ஜானகி. ரவி தேஜா கூறுகையில் மும்பை ஐ.ஐ.டி.யில்  பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்து படிக்கப்போவதகாக தெரிவித்தார். 225-வது ரேங்க் எடுத்து விக்னேஷ் மனோகரன் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர்.231-வது ரேங்க் எடுத்த அரவிந்த் நங்கநல்லூர்தில்லை கங்காநகரைச்சேர்ந்தவர். இவரது தந்தை வி.சுரேஷ் இந்தியன் வங்கியில் சீனியர் மேலாளராகவும் தாய் எஸ்.சாந்தி இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் குமாஸ்தாவாகவும் பணியாற்றுகிறார்கள்.அரவிந்த் சென்னை ஐ.ஐ.டி.யில்பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்து படிக்க போவதாக தெரிவித்தார்.

          தமிழ்நாட்டில் முதல் மாணவர் அனிகேட்முரேகர் கூறியதாவது:-டாக்டர் குடும்பம்நான் சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் படித்தேன்.எனது தந்தை டாக்டர் மனோஜ், தாய் டாக்டர் காஞ்சன்.அதுமட்டுமல்ல எனது குடும்பத்தில் டாக்டர்கள் ஏராளம்.
 
         இருப்பினும் எனக்கு மருத்துவதொழிலில் அதிக நாட்டம் இல்லை. என்ஜி னீயரிங் படிக்கவே விருப்பம்.எனவே மும்பை ஐ.ஐ.டி.யில் பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்து படிப்பேன். இவ்வாறு அனிகேட் முரேகர் தெரிவித்தார்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive