குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் சார்பில் 1.92 கோடி ரூபாய் மதிப்பில்
சின்ன வண்டிச்சோலை பகுதியில் உள்ள அரசு பள்ளியை தரம் உயர்த்தும் வகையில்,
ஆங்கில வழி பள்ளிக்கான நவீன புதிய கட்டடம் அமைக்கும் பணிகள்
துவங்கியுள்ளன.புவியியல் துறை தொழில்நுட்ப உதவியாளர் சம்பத் தலைமையில்
மண்ணியல் பேராசிரியர்கள் டாக்டர் சுப்ரமணி, சத்தியநாராயணன், ஸ்ரீதர்
ஆகியோர் சின்ன வண்டிச்சோலையில் பள்ளி கட்டட அடித்தளம் அமைக்கும் இடங்களை
ஆய்வு செய்தனர். இங்குள்ள மண் மாதிரிகள் ஆய்வுக்காக
எடுக்கப்பட்டுள்ளன.அதிகாரிகள் கூறுகையில், "இன்னும் ஒரு வாரத்தில் மண்ணின்
தன்மை, கட்டடம் அமைக்கும் வழிமுறைகள் குறித்து கன்டோன்மென்ட்
நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்படும். அதன்பேரில் வரைபடம் அமைத்து
கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன" என்றனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பள்ளி கட்டடம் அமைக்கும் பணி: புவியியல் துறையினர் ஆய்வு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...