Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தலைமை ஆசிரியை முன்பு பள்ளி மாணவர் தீக்குளிக்க முயற்சி

                         

          தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை முன்பு மாணவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்ட தாவது:-

அரசு உதவித்தொகை

          தேனி அல்லிநகரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அல்லிநகரம் சாலிமரத்தெருவை சேர்ந்த வீராச்சாமி என்பவருடைய மகன் சாமுவேல்(வயது 19) கடந்த ஆண்டு பிளஸ்-1 படித்து முடித்தார். இவர் அதே பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்து அரசு பொதுத் தேர்வில் 416 மதிப்பெண்கள் எடுத்ததால் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.

          இந்த நிலையில் பிளஸ்-2 படிப்பை வேறு பள்ளியில் படிப்பதற்காக தனது பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் கடந்த கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை அளிக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டு வந்துள் ளார். ஆனால் மாற்றுச் சான்றி தழ் கொடுக்காமல் அலைக் கழித்ததாக கூறப்படுகிறது. கடந்த 13-ந் தேதி பள்ளி மாற்று சான்றிதழை சாமுவேல் பெற்றுள்ளார்.

தீக்குளிக்க முயற்சி

         இதனைத் தொடர்ந்து சாமு வேல் தான் பிளஸ்-1 படித்தற்கு அரசு உதவித்தொகை தருமாறு பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் கல்வித்துறையிடம் இருந்து இதுவரை எந்த மாணவருக்கும் அரசு உதவித்தொகை வர வில்லை, ஒரு மாத காலத்தில் பெற்று தருவதாக கூறி உள் ளார். இதனை சாமுவேல் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் நேற்று காலை இவர் தனது வீட்டில் இருந்து இருந்து மண்எண்னை கேனுடன் தான் படித்த பள்ளிக்கு வந்தார்.

       பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்கள், சாமுவேல் மண்எண்ணை கேனுடன் வந்ததை வேடிக்கை பார்த் தனர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியை ஜேசுவின் பவி அங்கு வந்தார். உடனே மாணவர் சாமுவேல் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே ஆசிரியர்கள் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தினர்.

                 இதுகுறித்து தகவல் அறிந்த தும் அல்லிநகரம் போலீசார் விரைந்து வந்து தீக்குளிக்க முயன்ற மாணவர் சாமுவேலை பிடித்து போலீஸ் நிலையத் திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.




2 Comments:

  1. வெற்றிய்ரசன்6/18/2014 9:57 am

    இது ஒரு திசை மாறிய் பற்வை. 10வ்து படிப்பில் நல்ல மதிப்பெண்கல் பெற்று 11ஆம் வ்குப்பு முடித்து விட்டு அடுத்தபள்ளிக்கு (1)ஏன் ப்டிக்க செல்கிறான். யோசிக்கவும். நல்ல ஆசிரியர்கள் இப்பள்ளியில் இருந்ததால் தானே 416 மதிப்பெண் பெற்றுள்ளான்.அடுத்தது அரசு நிதியை கேட்பது சரியல்ல.அரசு கொடுக்கும்போதுதான் வாங்கி கொள்ள வேண்டும். (2)அவ்வளவு பண அவரசம் என்ன்? (3) ஆசிய்ர்கலை மிரட்ட மண்எண்னை கேனுடன் வருவது என்ன் மன்நிலை. மாணவிக்லிடையே தன்னை பெரியாளாக , ஹீரோ வாக காட்டி கொள்ள நடிப்பு.
    ஊகம்:
    இந்த மாணவன் ஒரு மன்நிலையில் . ஒரு த்லை காதல் வயப்பட்டவன்.போல.
    416 மதிப்பென் பெற்ற்தே ஏதோ ஒரிரு ஆசிரியரின் அன்பினாலே தவிர அவனே முயற்சியுடன் பெற்றதல்ல. அரசு பண்ம் வங்கிக்கணக்குக்கு போகும். கேட்பது முறையல்ல. கைசெலவுக்கு வாங்குவது போல அல்ல. அவனுக்கு எத்ற்கு பண்ம் அவசரம். அரசு பள்ளீகலில் பண்மே வாஙுகுவதில்லை. வேறுபல்லிக்கு செல்வதால் அதிக் மதிபென் பெற வாய்ப்பு குறைவு. குறிப்பாக் இவ்வயது மாணவ்ர்க்ள் தாங்கல் 10 வ்குப்பில் படித்த மாண்வி வெறு ப்ள்ளியில் சேர்ந்திருப்பாள். அரும்பிய வய்து மாற்றத்தை புரிந்து கொள்வது. தீக்குளிப்பு என்பது அந்த பெண்ணுக்கு மிரட்டலே த்விர ஆசிரியருக்கல்ல. பணம் ஓடிபோக போக்கத்த்வ்ன் வேலை. இக்க்தைக்கு பின்னால் ஒரு ஆசிய்ரியர் இருப்பார். இதைபற்றிய தகவலை வெளியிடுவது அதைவிட மோசம். அடுத்த மாணவர்கலின் உண்ர்வை தூண்டகூடியதாக அமைந்துவிடும். மாண்வர்கலுக்கு நல்வழிகாட்டுங்கள் நீதிகலை கூறுங்கள். வ்ரும் காலம் நல்ல அறிவாளிகலை உருவாங்குங்கள்.

    ReplyDelete
  2. இவனை காப்பாத்தாமல் விட்டால், அவன் திகைத்திருப்பான், எப்படியும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கைதான் அந்த மூதேவிக்கு. சாக வேண்டுமானால் வீட்டிலேயே சாக வேண்டியதுதானே. அரசு ஸ்காலர்ஷிப் கொடுத்தவுடனே தலைமை ஆசிரியர் கொடுக்கிறார். இந்த களவாணி எல்லாம் படிப்பதே வீண்.அடுத்தவர்களை மிரட்டியே காலம் தள்ளும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive