சென்டாக் கவுன்சிலிங்கிற்கான அழைப்பு கடிதத்தை
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி
சேர்க்கைக்கான கவுன்சிலிங், புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில்
உள்ள சென்டாக் அலுவலகத்தில் நடக்க உள்ளது. முதல் கட்டமாக, எம்.பி.பி.எஸ்.,
பி.டி.எஸ். படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 24ம் தேதி துவங்கி இரண்டு
நாட்கள் நடக்கிறது.
ஏற்கெனவே கவுன்சிலிங் அழைப்புக் கடிதம் தபாலில்
அனுப்பப்பட்டது. அழைப்பு கடிதம் கிடைக்காத மாணவர்கள் அலைகழிக்கப்பட்டனர்.
இந்த பிரச்னையை கருத்தில் கொண்டு, இந்தாண்டு கவுன்சிலிங் அழைப்புக்
கடிதத்தை சென்டாக் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
சென்டாக் இணையதளத்தில் நுழைந்த பிறகு
புதுச்சேரி மாணவர்களா அல்லது பிற மாநில மாணவர்களா என்பதை டிக்
செய்யவேண்டும். பிறகு விண்ணப்பித்த கோர்ஸ், விண்ணப்ப எண் அல்லது பதிவெண்,
பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தங்களுக்கு எந்த தேதியில் கவுன்சிலிங்
நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கு
மட்டுமே முதற்கட்ட கவுன்சிலிங் நடத்த உள்ளதால் 1003 வரை கட் ஆப் பெற்ற
மாணவர்களுக்கு மட்டுமே இணையதளத்தில் கவுன்சிலிங் தேதி கிடைக்கும்.
பி.டெக்., பி.பார்ம் படிப்பிற்கான கவுன்சிலிங் தேதி இன்னும் முடிவாகவில்லை.
அனைத்து மாநிலங்களிலும் வரும் 25 ம் தேதிக்குள்
மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை துவங்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்
உத்தர விட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்
சேர்க்கைக்கான அனுமதியை எதிர்பார்க்காமல் முதற்கட்ட கவுன்சிலிங் நடத்தி
முடிக்க சென்டாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அரசு மருத்துவக் கல்லூரிக்கு வரும் 25 ம்
தேதிக்குள் அனுமதி கிடைத்தால் கவுன்சிலிங்கில் எந்த பிரச்னையும் இருக்காது.
முதற்கட்ட கவுன்சிலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரியின் இடங்கள் உடனே
நிரம்பி விடும். அரசு மருத்துவக் கல்லூரிக்கு 25 ம் தேதிக்கு பிறகு அனுமதி
கிடைத்தால் மீண்டும் முதற்கட்ட கவுன்சிலிங் நடத்த வேண்டிய கட்டாயம்
ஏற்படும்.
தனியார் மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்த 127
மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிக்கு தாவுவார்கள் என்பதால் மீண்டும்
கவுன்சிலிங் நடத்த வேண்டிய நிர்பந்தம் சென்டாக் அதிகாரிகளுக்கு ஏற்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...