எம்.பி.பி.எஸ்
மற்றும் பல்மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் இன்று
வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி இயக்குனர்
அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரவரிசை பட்டியலை
வெளியிட்டார்.
1. கே.சுந்தர்நடேஷ்– மேற்கு மாம்பலம் (டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம்).
2. எஸ்.அபிஷேக்–தேனாம் பேட்டை (ஸ்ரீவித்யா மந்திரி மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை).
3. வி.எஸ்.விஜயராம்– ஈரோடு (பாரதி வித்யாபவன் பள்ளி, திண்டல்).
4. எம்.மிதுன்–நாமக்கல் (கிரீன் பார்க் பள்ளி, நாமக்கல்).
5. ஈ.சுருதி–கோவை (கிரீன் பார்க் பள்ளி, நாமக்கல்).
6. கே.நிவேதா– நெய்வேலி (கிரீன் பார்க் பள்ளி, நாமக்கல்).
7. கே.ஆர்.மைதிலி–நாமக்கல் (ஆதர்னல் வித்யாலயா பள்ளி, அந்தியூர்).
8. ஈ.கலோவின் திவ்யா– கோவை (கிரீன் பார்க் பள்ளி–நாமக்கல்).
9. வி.கவுதம்–நாமக்கல் (கிரீன்பார்க் பள்ளி, நாமக்கல்).
10. எம்.மைவிழி சுருதி– ராசிபுரம் (எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்).
மாணவர் சேர்க்கை கமிட்டி செயலாளர் டாக்டர் சுகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
எம்.பி.பி.எஸ்
மற்றும் பல்மருத்துவ அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு 28 ஆயிரத்து
53 விண்ணப்பங்கள் மாணவ–மாணவிகளிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 368 மனுக்கள்
நிராகரிக்கப்பட்டன. 27 ஆயிரத்து 539 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதில்
ஆண்கள் 10 ஆயிரத்து 105 பேர் பெண்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 434.
முதல்
தலைமுறை பட்டதாரிகள் 10 ஆயிரத்து 61 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 132
மாணவ– மாணவிகள் 200–க்கு 200 மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் இடம்
பிடித்துள்ளனர்.
மருத்துவபட்டப்
படிப்புக்கான முதல் கலந்தாய்வு 17–ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு
பிரிவினருக்காக நடைபெறுகிறது. இதில் விளையாட்டு பிரிவு, மாற்றுத்
திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் பங்கேற்கிறார்கள்.
பொதுப்
பிரிவு கலந்தாய்வு 18–ந்தேதி தொடங்கி 22–ந்தேதி வரை நடைபெறுகிறது. 19 அரசு
மருத்துவ கல்லூரிகளில் 2555 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் அகில
இந்திய இட ஒதுக்கீடு 383 போக மீதம் உள்ள 2172 இடங்கள் கவுன்சிலிங் மூலம்
நிரப்பப்படுகிறது.
அரசு
பல்மருத்துவ கல்லூரியில் 85 இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரி களில் அரசு
ஒதுக் கீட்டு இடங்கள் 993 உள்ளன. இந்த இடங்களும் பொது கலந்தாய்வில்
நிரப்பப்படுகின்றன.
முதல்
கட்ட கலந்தாய்வில் 400 எம்.பி.பி.எஸ் இடங்கள் சேர்க்கப்படவில்லை. அவை
2–வது கட்ட கலந்தாய்வில் எடுத்துக் கொள்ளப்படும். 2–வது கட்ட கவுன்சிலிங்
ஜூலை 2–வது வாரம் நடைபெறும். செப்டம்பர் 1–ந்தேதி அரசு மருத்துவ கல்லூரிகள்
தொடங்கும்.
தினந்தோறும்
நடைபெறும் கலந்தாய்வு பற்றிய விவரங்கள் மற்றும் காலி இடங்கள் பற்றியவிவரம்
மருத்துவ கல்வி இணைய தளத்தில் இடம் பெறும். தனியார் மருத்துவ
கல்லூரிகளுக்கான கல்வி கட்டணம் கடந்த ஆண்டு என்ன நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ
இதுவரை அதில் எந்த மாற்றமும் இல்லை. 11 தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம்
தேர்வு செய்பவர்கள் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும். இதை திரும்ப
பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...