மழை
காலம் துவங்குவதை ஒட்டி, பள்ளிகளில், மாணவ, மாணவியர் பாதுகாப்பிற்கு
தேவையான நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வி
இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.
* மழை காலம் துவங்குவதால், பள்ளி வளாகத்தில், மாணவ, மாணவியரின் பாதுகாப்பில், தலைமை ஆசிரியர், தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
*
வளாகத்தில், கிணறு, கழிவுநீர் தொட்டி, நீர்தேக்க தொட்டி ஆகியவை
திறந்திருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்து, திறந்திருந்தால், உடனடியாக மூட
வேண்டும்.
* 'இடி, மின்னலின் போது, மாணவர்கள், மரத்தின் கீழ் நிற்கக்கூடாது' என, வகுப்பில் அறிவுறுத்த வேண்டும்.
* மாணவர்களைக் கொண்டு, மின்சாதனங்களை இயக்குவதை, தவிர்க்க வேண்டும்.
*
சாலை விதிகள் குறித்தும், சாலைகளில், மழை நீர் தேங்கி இருந்தால், எப்படி
செல்ல வேண்டும் என்பது குறித்தும், மாணவர்களுக்கு, விளக்க வேண்டும்.
* பள்ளிகளில், முதலுதவி மருத்துவ பெட்டிகள், தயாராக வைத்திருக்க வேண்டும்.
* தீயணைப்பு சாதனங்களையும், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு, இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...