Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'போலி' பணி நியமன ஆணை: சம்பளத்தை திரும்பப் பெற நடவடிக்கை


         வேலூரில், 'போலி' பணி நியமன ஆணை வழங்கிய, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' ஆனது அம்பலமாகியுள்ளது.

      வேலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலராக மதி பணிபுரிந்து வந்தார். இவரை, சஸ்பெண்ட் செய்து, பள்ளி கல்வித் துறை செயலர் சபிதா, 20ம் தேதி உத்தரவிட்டார். இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2012ல், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், வேலூர் மாவட்டத்தில், பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், 220 பேர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. பட்டியலில் உள்ளபடி, 160 பேருக்கு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள, 60 பேரிடம், தலா, ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, பணி நியமன ஆணையை, முதன்மை கல்வி அலுவலர் மதி வழங்கியுள்ளார். அப்போது, ரெகுலர் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய பொன்குமார், விடுமுறையில் இருந்ததால், அவரது கையெழுத்தை, போலியாக போட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலர் மதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், போலி கையெழுத்திட்டு, பணி நியமனம் பெற்றவர்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்படுகிறது. அவர்களை பணி நீக்கம் செய்யவும், இரு ஆண்டுகள், அவர்கள் வாங்கிய சம்பளத்தை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.




4 Comments:

  1. This kind of corrupted District Level Bureacrats, especially those who are heading the Education Departments, should not be settled the following by Govt. of Tamilnadu, together with compulsory retirement atonce.

    1) Gratuity - to be dispensed
    2) Pension - to be dispensed
    3) Five year Imprisonment
    4) 1 Lakh fine for bringing ashame to Education Dept. amid Public.
    5) The Service register of the concerned should be ceased atonce.

    - A Well Wisher of the Society

    ReplyDelete
  2. இது திருமதி மதி மட்டும் தனியாக செய்திருக்க முடியாது. தோண்டினால் இன்னும் பெரிய அதிர்ச்சிகள் காத்திருக்கும்.

    ReplyDelete
  3. பிரியங்கா6/24/2014 6:51 pm

    மதி ஒரு பெண் அதிகாரி. ரொம்ப தெரிஞ்ச மாதிரி கறாரா உள்ள மாதிரி நடிப்பு வேற். உடந்தையா உள்ளவர்களையும் சஸ்பெண்ட் செய்யனும். சபீதா செயலாளர் நல்ல டேலட் அதிகாரி. எந்த கோணத்திலும் கரைகண்டவர். இவர் செய்ல்; வேலூர் மாவட்டத்திற்கே அவமானமாக உள்ளது போலும். மற்ற நேர்மையானவர்களும் இவர்களால் கெட்ட்பேர். அதிக்காரியின் கையெழுத்தே போட்டவர் இவரா, அல்லது வேறு ஒருவரா?.60 ல்ட்சம் பாவம் . வேலையில்லாதவரின் வயிற்று பொழப்புக்கு கொடுத்ததால் அவர்களை மன்னித்து எலியை விட்டு பூனையை பிடிக்கவேண்டும்.

    ReplyDelete
  4. Entha mathiri athigarigalai DIMISS pannanum, velai vendumnu employmentil pathivu panni wait panniyirunthal evargalukku panam vangikkondu kurukku vazhi vera.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive