பணியில் இருக்கும்போது, உயிரிழக்கும் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு,கருணை வேலை -அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணியில் இருக்கும்போது, உயிரிழக்கும் ராணுவ வீரரின்
குடும்பத்தினருக்கு,கருணை வேலை வழங்கும் திட்டம் இருக்கிறதா' என, தமிழக
அரசின் தலைமை செயலர்,அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்தவர், மேரி மெடில்டா. இவரது கணவர்,
மரியலூயிஸ்,ராணுவத்தில் பணியாற்றினார். 14 ஆண்டு பணிக்குப் பின், 2004,
டிசம்பரில் இறந்தார். கருணை அடிப்படையில் வேலை கேட்டு, சேலம்,
கலெக்டருக்கு, மேரி, விண்ணப்பித்தார். வருவாய் உதவியாளர்பணிக்கு, பெயர்களை
பரிந்துரைக்கும்படி, மேட்டூர் நகராட்சி கமிஷனர், கலெக்டருக்கு கடிதம்
அனுப்பினார்.
மேரி மெடில்டா பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால்,மேரியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இறந்தஊழியர் பணியாற்றிய துறையில் தான், கருணை வேலை வழங்க முடியும் என்றும் காரணம் கூறப்பட்டது.இதையடுத்து, வருவாய் உதவியாளராக நியமிக்க கோரி, உயர்நீதிமன்றத்தில், மேரி மெடில்டா, மனு தாக்கல்செய்தார்.இம்மனுவை விசாரித்த, நீதிபதி நாகமுத்து, பிறப்பித்த இடைக்கால உத்தரவு: பணியில் இருக்கும்போது,உயிரிழக்கும் ராணுவத்தினரின் குடும்பத்துக்கு, வேலை வழங்குவது குறித்து, தமிழக அரசிடம் திட்டம் ஏதும்உள்ளதா என, இந்த கோர்ட்டுக்கு தெரிவிக்கவில்லை.
அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என்பதால்,அரசின் நிலையை தெரிந்து கொள்ள, கோர்ட் விரும்புகிறது. பணியில் இருக்கும்போது, உயிரிழக்கும்ராணுவத்தினரின் குடும்பத்துக்கு, வேலை வழங்கும் திட்டம் தற்போது உள்ளதா அல்லது அவ்வாறு திட்டம்ஏதும், அரசின் பரிசீலனையில் உள்ளதா என்பதை, தலைமை செயலர், தெரிவிக்க வேண்டும். இம்மாதம், 23ம் தேதிக்குள், அவர், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கு விசாரணை, 23ம் தேதிக்கு,தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...