பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.40 கோடியே 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழக
முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் அரசு
மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள 24 வகுப்பறைகள் மற்றும்
ஆய்வகக் கட்டடங்களை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், மற்றும் நூலகக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 5 கோடியே 50 லட்சம் ருபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும்,
நபார்டு வங்கி கடன் உதவியுடன் கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர்,
தூத்துக்குடி, தருமபுரி, கடலூர், நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய
மாவட்டங்களில் 21 பள்ளிகளுக்கு 22 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்; அனைவருக்கும் கல்வி
இயக்கத்தின் மூலம் கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களிலுள்ள 10 முதல் 14 வயது
வரையிலான பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பெண் குழந்தைகள் கல்வியைத் தொடர
வசதியாக 61 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா என்னும் உண்டு உறைவிட
சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கட்டடங்கள் இல்லாத சேலம்,
தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறப்புப்
பள்ளிகளில் பயிலும் 782 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவிகள்
பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள 10 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா
உண்டு உறைவிட பள்ளிக் கட்டடங்கள்;
தொலைதூர
மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில்
கோயம்புத்தூர் மாவட்டம்-ஒண்டிப்புதூர் மற்றும் திருப்பூர் மாவட்டம்-அவிநாசி
ஆகிய இடங்களில் அமைந்துள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் 100 மாணவ
மாணவிகள் பயன்பெறும் வகையில் 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்; அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ்
கோயம்புத்தூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திண்டுக்கல்,
திருவாரூர், காஞ்சிபுரம், ஈரோடு, திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும்
விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 40 பள்ளிகளில் 4 கோடியே 5 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்;
தமிழ்நாடு
அரசு பொது நூலகத் துறையின் சார்பில் வேலூர், தூத்துக்குடி, கோயம்புத்தூர்,
நாமக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 47,091 வாசகர்கள் பயனடையும்
வகையில் 2 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகக்
கட்டடங்கள்;
என மொத்தம், 35 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மற்றும் நூலகக் கட்டடங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்;
அலுவல்
பணி நிமித்தம் சென்னைக்கு வரும் ஆசிரியர்கள் குறைந்த செலவில் தங்குவதற்காக
சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள ஆசிரியர் இல்லத்தில் 2 கோடியே 50
லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் அறைகள்; திருச்சிராப்பள்ளியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆசிரியர் இல்லக் கட்டடம்; என மொத்தம் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...