சென்னை, அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் பங்கேற்க, வெளியூரில் இருந்து
வரும் மாணவர்கள் மற்றும் அவருடன் உதவியாக வருபவருக்கு, அரசு பஸ்களில், 50
சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில், முதலாம் ஆண்டு பொறியியல் கல்லுாரி சேர்க்கை கலந்தாய்வு, வரும், 23ம் தேதி முதல் ஜூலை, 28ம் தேதி வரை நடக்கிறது.சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும், கலந்தாய்வில் பங்கேற்க, வெளியூரில் இருந்து (சென்னை மாவட்டம் நீங்கலாக), சென்னை வரும் மாணவர் மற்றும்அவருடன் உதவியாக வருபவருக்கு, அரசு பஸ்களில், 50 சதவீதம், இருவழி பயண கட்டணச் சலுகை வழங்கப்படும்.
இதைப்பெற, சென்னை, அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்விற்கான, அழைப்பு கடிதம் நகலை, சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும்.அதை பெற்றுக் கொள்ளும் அலுவலர்கள், '50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டது' என, அழைப்பு கடிதத்தின் முன்பக்கத்தில், சான்றளித்த பின், தக்க பயணச்சீட்டுகளை மாணவர்களுக்கு வழங்குவர்.இதே நடைமுறை, கலந்தாய்வை முடித்து, ஊருக்கு திரும்ப செல்வதற்கும் பொருந்தும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...